பல்லி விழுந்த உணவு விசமாகுமா?

நம் வீடு முதல் காடு வரை எங்கும் பரிணமித்து வாழும் உயிரினம் பல்லிகள்…
ஒனான், கவுளி, உடும்பு, பச்சோந்தி, அரணைகள். ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் போன்ற குளிர் நிறைந்த பகுதி தவிர்த்து, காரணம் குளிர் ரத்த பிராணிகள் என்பதால் தங்கள் உடல் வெப்பத்தை உடல் அளவில் உற்பத்தி செய்திட இயாலாது சூழலை சார்ந்து உடல் வெப்பத்தை சமன் செய்திடும் உயிரினங்கள். ஆராய்ச்சிகள் தொடர்ந்தாலும் அங்கும் பல்லி இனங்கள் கண்டு பிடிக்கப்பட்டால் ஆச்சரியப் படுவதிற்கில்லை.

கொமோடோ டிராகன் போன்ற உலகிலேயே பெரிய உருவம் கொண்ட பல்லி இனம் சுமார் 10 அடி நீளம் முதல் ஜாராகுவா (Sphaerodactylus Ariasae) போன்ற 16 மில்லி மீட்டர் நீளம் கொண்ட உலகின் சிறிய பல்லிகள் வரை இயற்கையில் உள்ளன. பரிணாம வளர்ச்சியின் காரணமாக சில Legless Lizards (Anniella pulchra) பல்லிகள் கால்கள் இல்லாமல் பரிணமித்து உள்ளன.

ஆறாயிரத்திற்கும் அதிகமாக பல்லி இனங்கள் கண்டு பிடிக்கப்பட்டு இருந்தாலும், இன்னும் பல இனங்கள் மனித பார்வைக்கு சிக்காது இருக்கின்றன.

சுமார் 200 வகைக்கு மேல் பள்ளியினங்கள் இந்தியாவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்கின்றனர்.

பல்லிகள் உயிர் சங்கிலி தொடர் சமன்பாட்டில் முக்கிய காரணியாக விளங்குகிறது. பூச்சிகளின் பெருக்கத்தை கட்டுக்குள் வைப்பது போல் பல உயிரினங்களுக்கு (பறவை, பாம்புகள்) இரை விலங்காகும் விளங்குகிறது.

கொசுக்களை தின்றொழித்த பல்லிகளை மனிதன் கொன்றொழித்தான். ஆம் பல்லிகள் மீது மனிதன் கொண்டிருந்த மூட நம்பிக்கைகள் மற்றும் பூச்சிகளை ஒழிக்க பயன்படுத்திய உயிர் கொல்லி நச்சு மருந்துகள்.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பறக்கும் பல்லிகள்(Flying Lizards, பாறை ஓணான்கள் (Rock Agama), விசிறித் தொண்டை ஓணான்கள் (Fan Throated Lizard), மரப்பல்லிகள் வகைகள், பச்சை நிற காட்டு ஓணான்கள் இன்னும் பல வகை இனங்கள் காணலாம்.

நகரமயமாக்கல் எப்படி பல்லி இனங்களின் வாழ்க்கைச் சூழலை பாதித்து அவ்வினதின் அழிவுக்கு வித்திட்டது.

என் சிறுவயதில் இயல்பாய் நான் கண்டு விளையாடிய அரணைகள், ஓணான்கள் இன்று
காண்பது அரிதாகிவிட்டது. தோட்டங்கள் கட்டிடங்கள் ஆனது, மண் சிமெண்ட் பூச்சால் பசுமை துளிர்க்க முடியவில்லை அழிந்தன பல்லிகள்.

தண்ணீர் கேட்ட ராமருக்கு சிறுநீர் கொடுத்த கோபம், என் பகுத்தறிவு இல்லாத தலைமுறை வரை நீண்டது, விளைவு காய்ந்த நீல குட்சியில் நரம்பு கோர்த்த சுருக்கில் எத்தனை எத்தனை ஓணான்கள் மூக்குப்பொடி மூக்கில் இட்டு ஆட வைக்கிறேன் என்ற பெயரில் கொன்று குவித்திருப்பேன், வாலில் நூள் கட்டி மின் கம்பத்தில் கட்டியிருப்பேன், தீயில் வாட்டியிருப்பேன்.

வீட்டு பள்ளிகளிடம் சகுனம் கேட்டு துரத்தி அடித்தேன்…

பல்லி விழுந்த உணவு விசமாகுமா? மனித உயிர்களுக்கு ஆபத்தாகுமா?
அன்றாடம் செய்த்தித் தாள்களில் வரும் செய்தி பல்லி விழுந்த உணவால் பள்ளி மாணவர்கள் வந்தி மயக்கம். வாந்தி எடுத்து மயங்கியவர் பெரும்பாலும் பல்லி விழுந்த செய்தியை கேட்ட பின் தான் வாந்தியும் அதை தொடர்ந்து நீர் சத்து இழந்து மயக்கமும் ஏற்பட்டிருக்கும். மீண்டும் இயல்பு நிலை பெற உடனே மருத்துவமனை அழைத்து சென்று குளுகோசு ஏற்றுவார்கள் உடல் நீர் சத்து பெற.

அதைத்தவிர வேறு காரணம் இருக்கா என்றால் ஆம் பொதுவாக கழிவறை, குப்பைகூழம் போன்ற இடங்களில் சுற்றும் பல்லியின் உடலில் தொற்றி இருக்கும் சால்மோனெல்லா என்கின்ற ஒரு வகை தொற்று கிருமி யால் அது விழுந்த உணவு பண்டத்தை கெட்டுப்போக செய்து இருக்கலாம். இதில் சூடான உணவு என்றால் கிருமிகள் இறந்து போகும், சரி ஆறிய உணவு என்றாலும் சாப்பிட்ட உடனே வாந்தி மயக்கம் போன்ற உடலியல் மாற்றங்கள் ஏற்படாது அதற்கு சில நாட்கள் பிடிக்கலாம்.

நாம் சிறுவயது முதலே பல்லி கண்டு ஒவ்வாமை வெளிப்படுத்துவது, தவறான பார்வை இவையால் மட்டுமே ஒருவருக்கு வாந்தி வரும்.

நஞ்சுள்ள பல்லி உலகில் உள்ளதா என்றால் ஆம். அது மிகவும் சொற்பமே. Gila monster (Heloderma suspectum போன்ற ஒரு வகை இந்தியாவில் இல்லை.

பெரும்பாலும் முட்டை இட்டு குட்டிகள் வெளிவரும், சில வகை பல்லி இனங்கள் நேரிடையாக குட்டிகள் ஈனும்.

என் வீடு திறந்தே இருக்கின்றது என் பல்லியின் வருகைக்காக, என் தோட்டங்கள் பசுமை நிறைந்து இருக்கின்றது கரட்டாண்டிகள் மகிழ்ச்சியாய் வாழ…

புகைப்படம் 2015ல் எடுத்தது…

Leave a reply