Assam Women Rescued and Reunion at Madurai அசாம் பெண் மதுரையில் மீட்பு

அசாமில் இருந்து தென்னிந்தியா நோக்கி பிழைப்பிற்காக பயணித்த 40 வயது வழிதவறிய பெண் ஒருவர் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் மீட்கப்பட்டு மீண்டும் தனது குடும்பத்துடன் சேர்த்துவைகபட்டார்.
கடந்த நவம்பர் 2023 அன்று மதுரை C2 சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தால் மீட்கப்பட்ட வடஇந்தியப் பெண் ஒருவர் திருநகர் அடைக்கலம் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.
அவரின் உடைமைகளை பரிசோதித்த காவலர்கள் அவரின் ஆதார் முகவரி கொண்டு அவர் பெயர் சங்கீதா போரா என்றும், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

பின் திருநகர் அடைக்கலம் முதியோர் இல்லம் நிர்வாகி நாகலட்சுமி அவர்களின் உதவியோடு தற்காலிகமாக அங்கு தங்கவைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் அவரிடம் இருந்த அலைபேசி குறிப்புகளை கொண்டு அவரின் குடும்பத்தை அணுக முயற்சிகள் இல்ல நிர்வாகி பொறியாளர் ரவி மற்றும் ராஜன் அவர்கள் மேற்கொண்டனர்.
முதியோர் இல்லத்தில் அவரின் நடவடிக்கைகளை கவனித்து பின் சங்கீதா போரா மனஅழுத்தம் காரணமாக மனநிலை சீரற்று இருப்பதை உணர்ந்து, அவரின் மருவாழ்வினை கருத்தில் கொண்டு மதுரை திருவாதவூர் நியூ கிரியேசன்ஸ் பெண்கள் மனநல காப்பகத்தில் அனுமதிக்க காவல்துறையிடம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், நியூ கிரியேசன்ஸ் பெண்கள் மனநல அறக்கட்டளையின் நிறுவனர் குளோரி டெபோரா அவர்களிடம் சங்கீதா ஒப்படைக்கப்பட்டார்.
மூன்று மாதகால தேடலுக்கு பின் அவரின் கணவர் மற்றும் உறவினர்களை கண்டடைந்த பின் அசாமில் இருந்து அவர்களை மதுரை வரவழைத்து மதுரை சுப்ரமணியபுரம் காவல்நிலையத்தில் அவரின் கணவரிடம் அனைவரின் முன்னிலையில் குடும்பத்துடன் சேர்த்துவைக்கப்பட்டார். சங்கீதா அவர்களுக்கு கணவர் மற்றும் நான்கு குழந்தைகள் இருப்பதும், அவர் மீண்டும் வீடு திரும்புவதில் பெரும் மகிழ்ச்சி கொண்டுதையும் மொழி வேறாக இருந்தாலும் அனைவருக்கும் கைகூப்பி வணக்கம் தெரிவித்து நன்றியினை வெளிப்படுத்தியது அனைவருக்கும் அந்த தருணம் நெகிழ்ச்சியாக இருந்தது.
இந்த தருணத்தில் எங்களுக்கு உதவிய மதுரை C2 சுப்ரமணியபுரம் காவல்நிலையம் ஆய்வாளர் திரு. பாண்டியன் மற்றும் சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கும், திருவாதவூர் நியூ கிரியேசன்ஸ் டிரஸ்ட் நிறுவனர் திருமதி. குளோரி டெபோரா அவர்களுக்கும், அவர்களின் காப்பாளர்களும் இந்த மூன்று மாதங்களுக்கும் அவருக்கு தேவையான உணவு, இருப்பிடம், மருந்து, மனநல ஆலோசனை  அ

னைத்தையும் இலவசமாக வழங்கியமைக்கும், அசாமில் இருந்து அவர்களின் குடும்பம் மதுரை வந்து மீண்டும் திரும்பிட ஆகும் பயணச் செலவு, தங்குவதற்கும், உணவுக்கும் ஏற்பட்ட பொருளாதார செலவுகளையும், அவரின் குடும்பத்தை கண்டுபிக்க தொடர் முயற்சிகள் மேற்கொண்ட பொறியாளர் திரு. ரவி, திரு. ராஜன், திருமதி. நாகலட்சுமி, திரு. அருண், திரு. வித்தோஸ் மற்றும் திருநகர் பக்கம் அடைக்கலம் முதியோர் இல்ல தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழர் வாழ்வியல் எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டிற்கு வந்த ஒரு பெண் பாதுகாப்பாக அரவணைக்கப்பட்டு பத்திரமாக மீண்டும் அவரின் தாய்நிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது நாடு எங்கும் நம் மாநிலத்தின் பெருமை ஓங்கும்.
Adaikkalam::அடைக்கலம்
New Creations Trust
திருநகர் பக்கம் : Thirunagar People Page
#reunion Assam Humanity North East India

Leave a reply