உத்தராகண்ட் முதல் மதுரை வரை : மனநலம் பாதிக்கப்பட்டவரின் மீட்பு கதை

உத்தரகாண்ட் முதல் மதுரை வரை : மனநலம் பாதிக்கப்பட்டவரின் மீட்பு கதை

கடந்த 14.05.2022 நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட திரு. வெங்கடேஷ் அவர்களை உத்தராகண்ட் மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அவர்களின் வழிகாட்டுதல் படி சமூக நலத்துறை மதுரை மாவட்ட அலுவலர் திருமதி. நளினாராணி அவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை தேடும் பணியும், அவரை மீட்டு மதுரை அழைத்துவருவதற்கான முயற்சிகளும் தொடங்கப்பட்டன.

ஆதரவற்ற நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் பாகேஸ்வர் மாவட்டம் காரூர் தாலுகா சிர்கோட் மலைக்கிராமம் அருகே திரு. வெங்கடேஷ் அவர்கள் அசுத்தமான ஆடை மற்றும் நீண்ட முடியும் தாடியுடனும் உள்ளார் என்று 11.05.2022 அக்கிராமத்து உள்ளூர் மக்கள் பாகேஸ்வர் மாட்டம் சிலி கிராமத்தை சேர்ந்த தன்னார்வலர் திரு.அகில் ஆசாத் ஜோஷி அவர்களுக்கு தகவல் தெரிவிக்கின்றனர். உடனே மனநலம் பாதிக்கப்பட்ட திரு. வெங்கடேஷ் அவர்களை உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்டு பேஜ்நாத் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த நபரின் மீட்பு குறித்த தகவலை அவரின் சமூக வலை தள பக்கத்தில் பதிவிடுகிறார். இந்த செய்தி உள்ளூர் பத்திரிக்கையான அமர் உஜாலா வில் வெளியானது.

 

இது குறித்த விசாரணை தமிழ் நாடு ஹவுஸ் அலுவலர் ஒருவர் திரு. அகில் ஆசாத் ஜோஷி அவர்களை தொடர்பு கொண்டு விசாரிப்புக்குப்பின் , திரு. வெங்கடேஷ் அவர்களை தில்லிக்கு அழைத்து வர சொல்லப்பட்டது.

திரு. வெங்கடேஷ் அவர்களை மீட்ட முதல் நாளில் இருந்து ஒரு தர்மசாலாவில் அவரை வைத்து உள்ளூர் மக்களின் உதவியுடன் அந்த தன்னார்வலர் பராமரித்து வந்தார். மேலும் அவரின் முயற்சியால் அவருக்கு முடித்திருத்தம் செய்து, குளிக்கச்செய்து, புத்தாடை அணிவித்து,உணவு வழங்கி உதவுகிறார்.

இந்நிலையில் திரு.ஞானகுரு மூத்த குடிமக்கள் உதவி எண் கள அலுவலர் நமது அடைக்கலம் முதியோர் இல்லம் மீட்பு மற்றும் குடும்ப ஒருங்கிணைப்பு தன்னார்வலர் பொறியாளர் ரவி அவர்களை தொடர்புகொண்டு ஹிந்தி மொழி தெரிந்த காரணத்தினால் அவரின் குடும்பத்தை மதுரையில் கண்டடைய முயற்சிகள் மேற்கொள்ள கேட்டுக்கொண்டார். ஜோஷி அவர்களிடம் தொடர்பு கொண்டு திரு.வெங்கடேஷ் அவர்களிடம் உரையாடி மதுரை முனிச்சாலை தினமணி டாக்கீஸ் அருகில் அவரும் அவரது குடும்பத்தாரும் வசித்ததாக தமிழ் மற்றும் சவுராஷ்டிரா மொழியில் அவர் தெரிவித்த தகவலை சேகரித்து, நேரில் அவரது குடும்பத்தை தேட முனைந்தார்.

இந்த நிகழ்வுகளுக்கு இடையே உத்தராண்டை சேர்ந்த திரு. அகில் ஆசாத் ஜோஷி என்ற தன்னார்வலர் அவரை மீட்டு தில்லியில் உள்ள தமிழ்நாடு ஹவுசில் சேர்ப்பதற்காக 16.05.2022 பேருந்து பயணத்தை தொடங்கினார்.

இந்த சூழலில் 17.05.2022 அன்று ஒன் ஸ்டாப் சென்டர் – சமூகநலத்துறை அலுவலர் திருமதி பிரேமலதா அவர்கள் நமது அடைக்கலம் முதியோர் இல்லத்தை தொடர்புகொண்டு மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு மதுரை அழைத்து வர நமது தன்னார்வலரின் உதவியை நாடினார். இதன் அடிப்படையில் அடைக்கலம் முதியோர் இல்லம் கள மேலாளர் திரு. சீனிவாசன் அவர்கள் அன்றிரவே புறப்பட ஆயத்தமானார். உத்தரகாண்டில் இருந்து வரும் மதுரை நபரை டெல்லி வந்ததும் அவரை மதுரைக்கு அழைத்து வந்து தாய்மடி இல்லத்தில் பாதுகாப்பதும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. மேலும் பயணத்திற்கான செலவுகளுக்கு பெரும் தொகை தேவைப்படும் என்பதால் நமது அடைக்கலம் முதியோர் இல்லம் குழுவுடன் வேறு அறக்கட்டளையின் உதவியும் பெறுவதென்று அதிகாரி அவர்களால் தீர்மானிக்கப்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அழைத்து வரும் பயணத்தில் தாய்மடி இல்ல பணியாளரும் இணைந்திட விருப்பம் கொண்டமையால் திருமதி பிரேமலதா அவர்களின் வழிகாட்டுதல் படி அன்றிரவே குழு பயணத்தை தொடங்கியது.

அடைக்கலம் முதியோர் இல்லத்தில் இருந்து திரு. சீனிவாசன் மற்றும் தாய்மடி இல்லம் திரு. காளீஸ்வரன் இருவரும் 16 . 05 .2022 அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டனர். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி நோக்கி பயணத்தை தொடங்கினர். திரு. அணில் ஜோஷி மற்றும் வெங்கடேஷ் ரயில் மார்க்கமாக அன்றிரவு பதினோரு மணிக்கு தமிழ்நாடு ஹவுஸ் வந்து சேர்ந்திருந்தனர்.

17.05.2022 மாலை நான்கு மணியளவில் மீட்பு குழுவினர் டெல்லி அடையும் முன்னர் அணைத்து ஏற்பாடுகளும் சமூக நலத்துறை ஒன் ஸ்டாப் சென்டர் அலுவலர் திருமதி. பிரேமலதா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். தமிழ்நாடு ஹவுஸ் அதிகாரிகளை சந்தித்து அவரை மீண்டும் மதுரைக்கு விமானம் மூலம் அழைத்துவர தமிழ்நாடு ஹவுஸ் இணை ஆணையாளர் திரு. சின்னதுரை அவர்களின் வழிகாட்டுதலையும் சான்றிதழ்களையும் பெற்றோம்.

18.05 . 2022 ஆண்டு அதிகாலை 3 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டவர்கள் காலை 8 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களை வரவேற்க திருமதி பிரேமலதா அவர்களின் தலைமையில் அடைக்கலம் முதியோர் இல்ல நிர்வாகிகள் மற்றும் தாய்மடி இல்ல நிர்வாகிகள் மதுரை விமானநிலையம் சென்று வரவேற்று, திரு. வெங்கடேஷ் அவர்களை தாய்மடி மனநல இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பின் மனநலம் பாதிக்கப்பட்ட திரு. வெங்கடேஷ் மற்றும் மீட்பு பணியில் இணைந்த தன்னார்வ தொண்டு நிறுவன தன்னார்வலர்களை சமூக நலத்துறை அதிகாரிகளுடன் சந்தித்து விவரம் அறிந்து அழைத்து பாராட்டிட மதுரை மாவட்ட ஆட்சியர் மரு. அனிஷ் சேகர் அவர்கள் சந்திக்க அழைத்ததின் பேரில் அனைவரும் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் பாராட்டுக்கள் பெற்றோம்.

தற்போது மனனநலம் பாதிக்கப்பட்ட வெங்கடேஷ் தாய்மடி இல்லத்தில் பத்திரமாக உள்ளார்.

இதில் நிதிச்சுமை
அடைக்கலம் முதியோர் இல்லம் ரூ 12000 /+
தாய்மடி இல்லம் ரூ 32000 /+
அவரவர் அறக்கட்டளை மூலம் போக்குவரத்து நிதியாக பகிர்ந்துகொண்டனர்.

இந்த மீட்புப்பணியை திறம்பட இரண்டு தொண்டு நிர்வாணத்தை ஒருங்கிணைத்து ஒரு பாலமாக செயல்பட்டு அவரை பத்திரமாக மதுரைக்கு அழைத்து வர பேருதவி புரிந்த ஒன் ஸ்டெப் சென்டர் மதுரை அலுவலர் திருமதி பிரேமலதா அவர்களுக்கு நன்றி.

மதுரை வந்த அன்றே மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாதிக்கப்பட்ட நபரை விசாரித்தும், சமூக நலத்துறை அதிகாரி அவர்களையும், தொண்டு நிறுவன தன்னார்வலர்களையும் நேரில் அழைத்து வாழ்த்தினார்.

இந்த ஒருங்கிணைந்த பணிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி.

 

9940832133, 8608700088

Leave a reply