உறைக்குள் கத்தி போல! கண்ணாடி விரியன் விசப்பல்

உறைக்குள் கத்தி போல!

Russells viper

இந்த விரியன் வகை பாம்பினங்களுக்கு விசப்பல்லானது சதைப்பைக்குள் அடங்கி இருக்கும்.
மற்ற பாம்பினங்களுடன் ஒப்பிடுகையில் இவற்றின் பல் நீண்ட குழாய் போன்றும் இயக்க அமைப்பு மிகவும் தனித்த செயல்பாடு கொண்டதாகும்.
பெரிய விடப் பற்கள் எப்படி தங்கள் வாய்க்குள் அடங்குகிறது. இவைகளுக்கு மேல் தாடையில் மடங்கும் சிறப்பு பற்கள் உள்ளது. வாயை மூடும் போது பல் தசைப் பையால் மூடப்பட்டு, பின்னோக்கி மடங்கி கொள்கிறது. தன் இரையை அல்லது அச்சுறுத்தும் அல்லது எதிர்பாராமல் மனிதர்களை கடிக்கும் தருணத்தில் பல் தசைப் பைக்குள் இருந்து வெளியே தள்ளப்பட்டு முன்னோக்கி செங்குத்தாக தன் வளைந்த விட(ஷ)ப் பற்கள் கடித்தல் என்ற செயல் மூலம் இரையின் அல்லது மனிதர்களின் தசைக்குள் ஊசி நுழைவது போல் விடப் பல் நுழைந்து இரத்த மண்டலத்திற்கு விட(ஷ)ம் செலுத்தப் படுகிறது.
கடிக்கும் போது சில சமயம் விடப் பற்கள் உடைவதும் உண்டு, மீண்டும் புதிய பற்கள் வளரும். சில பாம்புகளுக்கு உதிரி பற்களும் முதன்மை விடப் பல்லுக்கு அருகில் வளர்ந்திருக்கும். முதன்மை பல் உடைந்து விழும் சமயம் உதிரிப் பல் முதன்மையாக மாறும், இந்த நிகழ்வு வாழ்நாள் முழுவதும் தொடரும். காரணம் விடப் பற்களே அவைகளின் வேட்டைக்கு மற்றும் பசிதீர்க்கவும் அடிப்படையாக உள்ளது.
விரியன் போன்ற பாம்பினங்களின் பற்கள் வகை சுமார் 4 கோடி ஆண்டுக்கு முன் பரினமித்ததாக ஒரு அறிவியல் ஆய்வு சொல்கிறது.
கண்ணாடி விரியன் பாம்பின் விடப் பல் நீளம் சுமார் 1.5 சென்டி மீட்டர் வரை வளரக்கூடியது.

இறந்த பாம்பின் விடப் பல் புகைப்படம்.
Photographed from road kill specimen

#Solenoglyphous #Russellsviper #Fangs #கண்ணாடி_விரியன்
Vishwa Wishtohelp #urvanam #ஊர்வனம் #Snakesofindia #snakesoftamilnadu

Leave a reply