பல்லுயிர் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாகும் உள்ளூர் வலை மீன் பிடி வழக்கம். மீன்களை பிடிப்பதற்கு கண்மாய் மற்றும் கால்வாய்களில் கட்டப்படும் மீன் வலையில் எதிர்பாராத விதத்தில் பாம்புகளும் சிக்குவதுண்டு. அதுபோன்ற சமயங்களில் அணுகும் நிலை அறியாததால் மீன் வலையை அப்படியே அருகில் உள்ள முள் மரத்தில் அல்லது கரையில் போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். இந்த சூழலில் வலையில் இருந்து மீண்டு வர முடியாத பாம்பு காரணமே இன்றி இறந்து போகிறது. இதைதொடர்ந்து இந்த மீன் வலையில் பறவைகள், ஓணான், தவளை, தேரை மற்றும் இன்னபிற உயிரினங்களும் சிக்கி உயிர் இழக்கின்றன. “நம் ஊரின் பல்லுயிர் சூழல் தான் நம் முதல் சொத்து. அதை பாதுகாப்பதே நம் கடமை”. இந்த மந்திரத்தை பழக்குவோம், மனித இனம் பிழைத்திருக்க உதவுவோம்.
ஒரு நீர்நிலையின் உயிர் சூழல் சங்கிலி அறுபடாமல் பாதுகாக்கும் தண்ணீர் பாம்புகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினம். நம் வயிற்றை நிரப்புவதோடு நில்லாமல், பல்லுயிர் பாதுகாக்கும் முறைகளையும் அறிந்து இயற்கையிடம் இருந்து எடுத்துக் கொள்வோம்.
Checkered keelback
Non venomous
கண்டங்கண்டை நீர்கோலி
நஞ்சற்றது
Fowlea piscator
#Savesnakes #savereptiles #keelback #herping #fishing #fishnet #BiodiversityConservation #biodiversity #bmc #biodiversitymanagementcommitte