காடு என்பதும், காட்டுயிர் என்பதும் எங்கோ உள்ளதென்றும் அதை பாதுகாக்க நான் என்ன செய்ய முடியும் என்றும் தானே நீங்கள் எண்ணுவது? மனிதனால் காடு என்று வரையறுத்துள்ள எல்லைக்குள் வாழும் உயிர்களே காட்டுயிர் (தாவரங்களும் விலங்குகளும்) என்ற எண்ணம் தவறானது. அந்த மாயை உடைத்தெறிவோம். உங்களை சுற்றி நீங்கள் வாழும் சூழல் காங்கிரீட் காடாயினும்,…
கூதியார்குண்டு கண்மாயின் நீர்வரத்து குறித்து ஆய்வு செய்ய சென்ற இடத்தில் எறும்புகளின் குறிப்பிடத்தக்க ஒரு செயலை காண நேர்ந்தது.பொதுவாக பூமியில் தரைக்கடியில் வசிப்பிடம் உருவாக்கி வாழும் எறும்பு இனங்கள் பல உண்டு. ராணி எறும்பு, ஆண் எறும்பு, வேலைக்கார எறும்பு, இளம் வளரிகள், முட்டைகள் என பல உறவுகள். பொதுவாக மழைக்காலங்களில் அல்லது எதிர்பாராத…
மதுரையின் மையத்தில் பெருகி இருந்த மனித குடியிருப்புக்குள் என் சிட்டுக்குருவிகளும் பெருகி இருந்தன. அப்போது எனக்கு வயது 9 குறையாமல் இருக்கும், பள்ளி சிறு வயதுக்காலம். அப்போது என் மனதினுள் பதிந்த சிட்டுக்குருவிகள் குறித்த சில காட்சிகள் நினைவில் உள்ள மட்டும் இங்கு பகிர்கிறேன். என் சிட்டுக்குருவிகளின் ச்சிவ் ச்சியுவ் என அழகிய குரல்…
உங்கள் அச்சம் தான் என் மூலதனம்! பாம்பை கொண்டு வித்தை காட்டி, பாம்பை மகுடி ஊதி பிடித்து செல்லும் நண்பர்களுடனான என் சிறு அனுபவம்… நீங்கள் விழித்து கொள்வதற்காக. அன்று காலை எங்களுக்கு தகவல் கிடைத்தது பாம்பாட்டிகள் சிலர் ஒரு வீட்டில் பாம்புகளை பிடிக்க வந்துள்ளனர் என்று. உடனே தோழர் சகாவும் நானும் எங்கள்…
Ramakrishna Balaji திரு. ராமகிருஷ்ணன் பாலாஜி அவர்களின் பாம்புகள் குறித்த கேள்விக்கு பதில். “என்ன பாம்பு கடித்தது என்று தெரியாத பட்சத்தில் எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும்?” பதில் – ஒருவருக்கு பாம்பு கடித்துவிட்டு பின் மறைகிறது. கடித்தது நஞ்சுள்ள பாம்பா இல்லை நஞ்சற்ற பாம்பா என்று சந்தேகம் எழுகிறது. பொதுவாக கடித்த இடத்தை…
பாம்புகள் முன்னோக்கி வேகமாக ஊர்ந்து செல்லும் தன்மையை பெற்றாலும் அதனால் பின்னோக்கி அதே வேகத்தில் இயங்க முடியுமா?? தாங்கள் ஆய்வு செய்துள்ளீர்களா?? என்ன காரணம்? பெரும்பாலும் கிராமங்களில் பாம்பு கடித்தால் பூச்சி கடித்துவிட்டது என்கிறார்கள் அதன் பொருள் என்ன?? திரு. #கோவிந்தராஜ் அவர்களின் கேள்விக்கு பதில்… நான் அறிந்த வரையில்… பல்லுயிர்களின் இயல்புகள் குறித்த…
நம் வீடு முதல் காடு வரை எங்கும் பரிணமித்து வாழும் உயிரினம் பல்லிகள்… ஒனான், கவுளி, உடும்பு, பச்சோந்தி, அரணைகள். ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் போன்ற குளிர் நிறைந்த பகுதி தவிர்த்து, காரணம் குளிர் ரத்த பிராணிகள் என்பதால் தங்கள் உடல் வெப்பத்தை உடல் அளவில் உற்பத்தி செய்திட இயாலாது சூழலை சார்ந்து உடல்…
#பல்லிசொல்லும்பலன் உங்கள் வீட்டில் பதுங்கிய நான், விளக்கு வைக்கும் நேரத்தில் விழித்து, ராந்தல் விளக்கும், மின் விளக்கும் ஈர்த்த பூச்சிகளை வயிறு புடைக்க உண்ட சந்தோசத்தில் சிக் சிக் சிக் என்று என் மொழியில் பாடி மகிழ! திறந்தது ? பெரும்பாலும் சுவற்றின் அந்தரத்திலும் பக்கவாட்டிலும் ஏறி என் இரை பிடிக்க விரைவேன், சுவற்றின்…
மாங்கா மரத்துல மாங்கா திருடப் போயி, சூவ எறும்புகிட்ட கடிவாங்காத ஆளு உண்டா? சின்ன வயசுல இருந்தே எங்கூட பாத்து பழகுன எறும்ப சமீபத்துல காட்டுலாவுல சந்திச்சேன். ஆமா சேமட்டான்குளம் கண்மாய் கரை சாலைய ஒட்டி மஞ்சநெத்தி, மா மரத்துல நிறைய கூடு இருக்கும். இப்போ அந்த மரம் எல்லாம் இல்ல, அதையெல்லாம் புடிங்கிட்டு…
சேமட்டான்குளம் கண்மாயில் என்ன செய்யப்போகிறோம்? இக்கண்மாயின் நீர் ஆதாரத்தை வைத்து தான் திருநகர் : சுந்தர்நகர், நெல்லையப்பபுரம் எஸ்.ஆர்.வி. நகர், ஏ.ஆர்.வி. நகர் அமைதி சோலை, லையன்சிட்டி ஆகிய குடியிருப்பு பகுதிகள் உருவாகின. எஸ்.ஆர்.வி. நகர், அமைதி சோலை, லையன்சிட்டி குடியிருப்பு பகுதி உருவாவதற்கு முன் இங்கு விவசாயம் நடைபெற்றது. கண்மாயின் முந்தைய நிலை:…