மனித இனத்திற்கு ஆபத்து விளைவி(க்கும்)த்த பெரும் நோய்களான காலரா, போலியோ, டீபி, அம்மை, ஒழிக்க அரசு சுகாதாரத்துறை மூலம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது, அதில் சில ஒழிக்கப்பட்டும் விட்டது.
சரி மனிதர்களுக்கு ஆபத்து என்றால் விரைந்து திட்டங்கள் தீட்டி, இலவச முகாம்களை நடத்தி நோய் ஒழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால் அதே விலங்கினங்களுக்கு?
ரேபீஸ் நோயால் மனிதர்களுக்கு ஆபத்து என்பதால் அதை கட்டுப்படுத்த சிறிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது, முழுமையாக இல்லை.
அதை தவிர்த்து எங்களை போன்ற விலங்குகள் மீட்பாளர்களுக்கு மிகவும் சவால் கொடுப்பது நாய்களை தாக்கும் இரு பெரும் நோய்கள் #பார்வோ “Canine Parvo” மற்றும் #டிஸ்டம்பெர் “Canine Distemper”.
இந்நோய் தாக்கப்பட்ட நாய்கள் 90% இறப்பு அல்லது பிற வாழ்நாள் உடல் இயல்பில் பாதிப்பு என்பதாக உள்ளது. இந்நோய்க்கு பெரும்பாலும் குட்டி நாய்களே பாதிக்கப்படுகின்றன…
இந்த நோய்கள் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. பாதிக்கப்பட்ட நாய்களை நாம் தொடும் போது அல்லது எச்சில் படும்போது தொற்றும் அபாயமும் இல்லை.
ஆனால் இவைகள் பாதிக்கப்பட்ட நாய்களிடம் இருந்து ஆரோக்கியமான நாய்க்கு எளிதில் பரவுகிறது.
நீங்கள் உங்கள் நாயை (குட்டி) சாதாரண மருத்துவ சோதனைக்கு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்திருப்பீர். உங்கள் வீட்டில் சுறுசுறுப்பாக சுற்றி திரிந்த அந்த நாய் (குட்டி) இரண்டொரு நாட்களுக்கு பின் திடீர் என்று உணவு உட்கொள்ள மறுக்கும், சோர்வாக காணப்படும், காய்ச்சல் பின் சோதனை செய்தால் பார்வோ அல்லது டிஸ்டம்பெர் என்று மருத்துவ அறிக்கை வரும்.
உங்களுக்கு ஒன்றும் புரியாது. நாய்க்கு(குட்டி) நான் ஆரோக்கியமான உணவு தானே கொடுத்தேன், சரியாக தானே பராமரித்தேன் என்று மனம் வருந்தி அழுவீர்.
சரி நான் நாயை(குட்டி) மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை ஆனால் இந்த நோய் தொற்றியது எப்படி?
கால்நடை மருத்துவமனை செல்கிறீர்கள், அப்போது அங்கு அங்கு மருத்துவமனைக்கு அல்லது மருத்துவர் பார்வோ அல்லது டிஸ்டம்பர் நாய்க்கு(குட்டிக்கு) சிகிச்சை அளிக்(கப்படுகிறது)கிறார் அல்லது அளித்துள்ளார்.
1. மருத்துவமனையில் அதன் சிறுநீரையோ, வாந்தியையோ, எச்சிலையோ அல்லது அதன் வயிற்று போக்கையோ கையில் படுகிறது அல்லது காலணியால் மிதிக்கிறீர்கள், நீங்கள் கவனிக்கவில்லை. வீட்டுக்கு செல்கிறீர்கள். செருப்பை கழட்டி வைத்துவிட்டு வீட்டினுள் நுழைகிறீர்கள், உங்கள் செல்ல நாய்க்குட்டி நீங்கள் நோய் கொல்லிகொண்டு கழுவாத அந்த காலணியை முகர்கிறது. விளைவு உடனடி பார்வோ நோய் தொற்று.
2. நோய் பாதிக்கபட்ட அடுத்தவர் நாயை லேசாக வருடிவிட்டு, தூக்கி கொஞ்சி, உனக்கு ஒன்றும் ஆகாது டா செல்லம் என்று கொஞ்சி ஆறுதல் சொல்லிவிட்டு, வீட்டுக்கு வருகிறீர்கள் உங்கள் வீட்டு செல்லகுட்டி ஆரவாரத்தோடு உங்களை வரவேற்கிறது. குட்டியை எடுத்து நீங்கள் கொஞ்சுகிறீர்கள். விளைவு நோய் தொடருகிறது
இன்னும் பல வழிகளில் மனிதர்களும் அந்த நோய்களை நாய்களுக்கு கடத்தும் கருவி ஆகின்றனர்.
3. கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக உங்கள் செல்ல நாய்களுடன் வரிசையில் நிற்கிறீர்கள், அப்போது உங்கள் ஆரோக்கியமான நாய்(குட்டி) பாதிக்கப்பட்ட நாயின் அருகில் சென்று முகர்கிறது, விளையாடுகிறது. போன்ற சந்தர்ப்பங்களில் நோய் விரைவாக தொற்றிக்கொள்கிறது.
இந்த வைரஸ் Dettol/bleaching powder/pine oil போன்ற disinfectant களுக்குள் கூட மடிவதில்லை. இருந்தும் பார்வோ போன்ற நோய் பாதிக்கப்பட்ட நாய்களை சந்திக்க நேர்ந்தால் வேறு ஆரோக்கியமான நாய்களுக்கு பரவாமல் இருக்க நீங்கள் உங்கள் காலணி, கால்கள், கைகள் நன்கு கழுவ வேண்டுகிறோம்.
அரசு கால்நடை மருத்துவ கூடங்களில் நோய் தொற்றும் தொற்றா சிகிச்சை ஒரே அறையில் நடைபெறுகிறது. இதனால் நோய் எளிதில் பரவுகிறது. இதுவே இங்கு நிகழக்கூடிய சூழல்.
அரசு முன் வந்து அரசு கால்நடை மருத்துவமனைகளில் தொற்றும் மற்றும் தொற்றா நோய்களுக்கு தனித்தனி மருத்துவ சிகிச்சை கூடங்களை அமைத்து சிகிச்சை தொடர வேண்டும்.
மருத்துவர் அந்த அந்த நோய்க்கான தடுப்பூசிகளை காலத்தே உங்கள் நாய்களுக்கு போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்துவார்கள்.
அதில்
1. ரேபீஸ்
2. பார்வோ
3. டிஸ்டம்பர்
4. கென்னல் காப்ஃ
5. குடற்புழு நீக்கம்
இன்னும் பல
சரி இதன் ஒவ்வொன்றின் விலை விசாரித்தால் ₹200-500-1000 க்கு மேல். எங்களை போன்ற விலங்குகளை மீட்டு பராமரிப்பவர்களுக்கு, ஏழை, நடுத்தர மக்களுக்கு எட்டா தடுப்பூசிகளாக இருந்து வருகிறது.
எப்படி குழந்தைகளை தாக்கும் போலியோ ஒழிக்க அரசு இலவச முகாம்களை நடத்துகிறதோ, அது போல் எல்லா கால்நடை மருத்துவமனையிலும் ராபீஸ், பார்வோ, டிஸ்டம்பர் போன்ற நாய்களை தாக்கும் கொடிய நோய்க்கு இலவசமாக தடுப்பூசி போடுதல் வேண்டும்.
அதற்காக வேண்டிய அளவு நிதியினை கால்நடை பராமரிப்பு மற்றும் இந்திய விலங்குகள் நல வாரியம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தீவிர மருத்துவ சிகிச்சை மற்றும் கவனிப்பு இருந்தால் உயிர் பிழைக்க செய்ய முடியும் உயிர் கொல்லி நோயிடம் இருந்து…