பச்சை ஓணான் (Green Forest Lizard) 𝘾𝙖𝙡𝙤𝙩𝙚𝙨 𝙘𝙖𝙡𝙤𝙩𝙚𝙨 அழகான ஓணான் (Agamidae) குடும்பத்தை சேர்ந்த இவை

பச்சை ஓணான் (Green Forest Lizard) 𝘾𝙖𝙡𝙤𝙩𝙚𝙨 𝙘𝙖𝙡𝙤𝙩𝙚𝙨 அழகான ஓணான் (Agamidae) குடும்பத்தை சேர்ந்த இவை பச்சோந்தி குடும்பத்தை (Chamaeleonidae) சேர்ந்தது அல்ல. வேகமாக இயங்கக்கூடிய இப்பல்லியினம் பகலாடியாகும். தமிழ்நாட்டில் மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன.
மிகவும் அழகான ஓணான் இனமான இதன் ஆண் இணை சேரும் காலங்களில் தலை செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறமாற்றம் கொள்ளும்.
மேலும் பச்சோந்திகள் போலவே இவைகளும் தங்கள் நிறத்தை புறச்சூழலுக்கு ஏற்றாற்போல் மாற்றவல்லது(அடர் பச்சை, மித பச்சை, பழுப்பு நிறம்).
மரவாழ் இயல்பு கொண்ட இவ்வினத்தின் பெண் இனம் முட்டை இடுவதற்கு தரைப்பகுதிக்கு வந்து பாதுகாப்பான இடத்தில் சிறு குழி அமைத்து முட்டையிட்டு பின் மண் கொண்டு மூடி விடுமாம்.
பூச்சிகளை பிரதானமான உணவாக உட்கொள்ளும் இவை பூச்சி இனங்களை கட்டுக்குள் வைக்கவும், பல ஊனுண்ணிகளுக்கு (பாம்பு, பருந்து, ஆந்தை) உணவாகவும் இருந்து உணவுச் சங்கிலி அறுபடாமல் உயிர் சுழற்சியை பாதுகாக்கிறது.
#Wildlifeofmadurai #maduraiwild #wildlife #madurai_lizard #lizardsofinstagram #lizards #calotes #conservewildlife #urvanam #ஊர்வனம் #greenlizard #forestlizard

Leave a reply