நாடோடிகள் தீபாவளி / NOMADS DEEPAWALI / THIRUNAGAR PAKKAM 10th YEAR

நாடோடிப் பழங்குடி மக்களுடன் 2022ம் ஆண்டின் தீப ஒளித்திருநாள் கொண்டாட்டம்.

திருநகர் பக்கம் 10 ஆம் ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் 

Thirunagar Pakkam celebrated their 10th year Diwali at Nomadic Tribal village.

நிகழ்ச்சி ஏற்பாடு : திருநகர் பக்கம் குழு

Celebration Organised by Thirunagar Pakkam an initiative by Wish To Help Charitable Trust

காட்டு நாயக்கர் நாடோடிப் பழங்குடி மக்கள் சிறு குழுவாக (50 குடும்பங்கள்) மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கிராமம் அருகே ஜேஜே நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் குடுகுடுப்பை கொண்டு நல்ல காலம் பொறக்குது என்று வாக்கு சொல்லி அதற்கு சிறு சில்லறை அல்லது அரிசி பருப்பு என மக்கள் தருவதை வாங்கிக்கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

Kattu Nayakar an nomadic tribes used to say fortunes and get some remuneration as rice, groceries or some rupees what the fortune receiver feels. A small pack of 50 families resides at Madurai District, Thirupparamkundram, Nilaiyur, JJ nagar.

பொது விழா நாட்களில் அருகில் உள்ள நகர் பகுதிகளுக்குள் வளம் வந்து தீபாவளி பலகாரம் அல்லது யாசகம் கேட்பது என்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஒரு செயல் நமது திருநகர் பக்கம் குழுவிற்கு மன வருத்தத்தை அளித்தது. இவர்களின் குழந்தைகள் தீபாவளியை தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதை கந்தல் ஆடைகளை அணிந்து ஏங்கி நிற்பதை மனம் ஏற்றுக்கொள்ள வில்லை.

Due to poor these people are just a watcher of world festivals. This made us to select our Diwali to celebrate with them.

 

 

 

 

 

80 குழந்தைகளுக்கு புத்தாடை, 50 குடும்பங்களுக்கு இனிப்பு 300 நபர்களுக்கு பிரியாணி விருந்து என கொண்டாட்டமாக அனைவரும் மகிழ்ந்து கொண்டாடினர்.

We provided dresses for 80 childrens, Sweet boxes to 50 families, feast to 300 people of this village with  a celebration.

 

 

 

 

 

 

இது அனைத்தும் சாத்தியம் ஆவதற்கு உறுதுணையாக இருப்பது நமது நன்கொடையாளர்கள் மட்டுமே. இந்த விழாவினை எடுத்து நடத்த உதவிய அனைவருக்கும் எங்கள் திருநகர் பக்கம் குழு சார்பில் நன்றி.

All these are possible only with our beloved donars.

நமது அழைப்பை ஏற்று நேரில் வந்து விழாவை சிறப்பித்த மதுரையின் சமூக ஆர்வலர்கள் யூடூப் பிரபலம் செல்வம் ரேகா இணையர், திரு. நம்பிராஜன் (செல்கோ சோலார் நிறுவனம்), திரு. ஞானகுரு, (மூத்த குடிமக்கள் உதவி கள அலுவலர்), திரு. அபுபக்கர் (நீர்நிலை பாதுகாப்பு இயக்கம்), திரு.அண்ணாதுரை (சமூக ஆர்வலர்), திரு. செந்தில் ( APJ அப்துல் கலாம் நண்பர்கள் அறக்கட்டளை), திரு. அசோக்குமார் (மக்கள் தொண்டன்), திரு. சசி குமார் (சமூக ஆர்வலர்), திரு. கண்ணன் (எம்மால் இயன்றது), திரு. கார்த்திக் (கலாம் வழியில் அன்பு அறக்கட்டளை), திரு. உதயகுமார் (அரவிந்த் கண் மருத்துவமனை) கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

The celebration has been even more brighter with our chief guests Youtube celebrity Mrand Mrs Selva & Reka, Mr.Nambirajan SELCO India Solar Company), Mr. Gnanaguru (Elder Helpline), Mr. Abubakker ( Neernilai pathukappu Iyakkam), Mr. Annadurai (Social Activists), Mr. Sethil kumar(APJ Abdul Kalam Valiyil Nanbarkal Trust), Mr. Ashok kumar (Makkal Thondan), Mr. Sasi Kumar (Soacial Worker), Mr. Kannan (Emmal Iyandrathu), Mr. Karthik ( Kalam Valiyil Anbu Trust) Mr. Udayakumar (Aravind Eye Hospital) participated in this event.

குடுகுடுப்பை காட்டு நாயக்கர் பழங்குடி குழந்தைகள் தங்கள் பாரம்பரிய நடனத்தை வெளிப்படுத்தினர், பெரியவர்கள் குடுகுடுப்பை இசைத்து நல்வாக்கு வழங்கினர், பின் தற்கால சினிமா பாடல் பாடியும் நடனமாக ஆடியும் திறமையை வெளிப்படுத்தினர், திருமதி ரேகா செல்வம் அவர்கள் பாடல் பாடி அனைவரையும் மகிழ்வித்தார், பின் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் சிறப்புரையாற்றினர்.

Tribal dance, their livelihood speech, singing and dancing by their children added in this celebration day.

நிகழ்ச்சியின் இறுதியாக பட்டாசு வெடித்து பின் அனைவருக்கும் சுவைஉய்யான விருந்து படைக்கப்பட்டது.

We celebrated with Crackers and ended with feast

மக்களோடு மக்களாக அனைவரும் தரையில் அமர்ந்து நடத்தப்பட்டது நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பு.

All sit in floor without chair with the tribal people.

தொடரும் எங்கள் பயணம் …

 

 

 

 

  • Team Thirunagar Pakkam ( திருநகர் பக்கம் )

 

1 Comment

  • அமர்நாத். எஸ் கே
    Posted October 24, 2022 3:00 pm 0Likes

    சிறப்பான செயல்.
    இதில் இணைந்துள்ள அனைத்து அன்புள்ள ங்களுக்கும் வாழ்த்துக்கள்

Leave a reply