Bilingual Post (Tamil & English)
உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு 05.06.2023 அன்று காலை 7 மணிக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் திருநகர் பக்கம் (விஷ் டு ஹெல்ப் அறக்கட்டளை) சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நடை பயணத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் – மதுரை, அதிகாரி திரு. குணசேகரன் அவர்கள் மற்றும் திருநகர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திருமதி. ஸ்வேதா சத்யன் அவர்கள் பச்சை கொடி அசைத்து துவக்கிவைத்தனர். பேரணியின் முடிவில் அண்ணா பூங்கா வந்தடைந்த குழுவினர் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர், பின் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்ட மரக்கன்றுகள் நட்டு நிகழ்வினை முடித்துக் கொண்டனர்.
நிகழ்வில் திருநகர் பகுதி மக்கள், திருநகர் பக்கம் தன்னார்வலர்கள், திருநகர் நடை பயிற்சியாளர் சங்கம், மன்னர் கல்லூரி சமூக பணித்துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பேரணிக்கு திருநகர் காவல் துறையினர் பாதுகாப்பு வழங்கினர்.
Tamilnadu Pollution Control Board and Thirunagar Pakkam organised an awareness rally on World Environment Day on 05.06.2023. Rally has been inaugrated by TNPCB Officer Dr. Gunasekar and Madurai Corporation Member Mrs. Swetha Sathyan. The event continued with taking pledge to save environment and planting native tree saplings. Thirunagar public, Mannar Thirumalai Nayakar college Social Work Department students, Walkers Club members participated in this rally. Thirunagar police given excellent patrolling service till the end of the event. We thank every one on this day.
Volunteer With Us 9940832133 / 8608700088