Right To Information Act – தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு

RTI – தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு இன்று 08.10.2023 காலை 8 மணிக்கு தமிழ்நாடு வனத்துறை – மதுரை வனக்கோ
ட்டம் (சமூக காடுகள்) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு பேரணி , திருநகர் பக்கம் திருநகர் பக்கம் : Thirunagar People Page மற்றும் கலசம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் மதுரை திருநகர் 3வது நிறுத்தத்தில் அமைந்துள்ள அடைக்கலம் முதியோர் இல்லத்தில் தொடக்க விழா நடைபெற்றது, பின் திருநகர் சாலையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி மாணவ மாணவிகள் பங்கேற்புடன் பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்வின் தொடக்க உரை வன சரகர் (சமூக காடுகள்) திரு. ஆறுமுகம் அவர்கள் அனைவரையும் வரவேற்று வாழ்த்தினார். இந்நிகழ்வின் சிறப்புரை வழங்க RTI ஆர்வலர் ஹக்கீம் Hakkim Rti , “தகவல் அறியும் உரிமை” நூல் ஆசிரியர் அவர்கள் இச்சட்டம் குறித்தான விழிப்புணர்வு தகவல்கள் தன் சிறப்பான உரையின் வாயிலாக வழங்கினார். RTI சட்டத்தின் தோற்றம், தேவை, தகவல் பெறும் வழிமுறைகள், கால அவகாசம் என்று தெளிவான விளக்கமளித்தார்.

மேலும் வன சரகர் அவர்களுக்கு தகவல் அறியும் உரிமை புத்தகத்தை ஹக்கீம் அவர்கள் பரிசாக வழங்கினார். மேலும் அனைவருக்கும் RTI சட்ட விழிப்புணர்வு கையேடு வழங்கினார். கலசம் அறக்கட்டளை செயலாளர் திரு. பெரியசாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
நிகழ்ச்சியினை திருநகர் பக்கம் நிலா பாண்டியன் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் திருநகர் முன்னாள் பேரூராட்சி தலைவர் திரு.பலராமன் அவர்கள் மற்றும் நடை பயிற்சி கழகம் சார்பில் திரு.சங்கரகுமார் அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் கலசம் அறக்கட்டளை மற்றும் திருநகர் பக்கம் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

 

#RTI #RTIHumanRightsActivistAssociation #RTIinfo #தகவல்_அறியும்_உரிமை_சட்டம் Right To Information Act ( தகவல் அறியும் உரிமை சட்டம்) Right To Information Act RTI Act/public grievances தகவல் அறியும் உரிமை சட்டம்/மக்கள் புகார் பெட்டி தகவல் அறியும் உரிமை சட்டம். தகவல் அறியும் உரிமை சட்டம் ARAKKONAM தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம்

Leave a reply