தமிழ்நாடு அரசு பசுமை முதன்மையாளர் விருது / TN Green Champion Award 2022

(Bilingual Post – Tamil & English)

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் விருதான “பசுமை முதன்மையாளர் விருது” 2022 ஆம் ஆண்டு பசுமை களப்பணி மூலம் சமூகத்தில் காலநிலை மாற்றத்திற்கான செயல்பாடுகள் மூலம் மாற்றம் ஏற்படுத்திய சேவைக்காக நமது திருநகர் பக்கம் : ஊர்வனம் : நீர்வனம் (விஷ் டு ஹெல்ப் அறக்கட்டளை) தேர்வாகினோம். இன்று சுற்றுச்சூழல் தினத்தன்று 05.06.2023 தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விருதும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கவிருந்ததது. அதனை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் திருமதி சங்கீதா அவர்கள் தலைமையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் – மதுரை மாவட்ட தலைமை பொறியாளர் முனைவர் குணசேகரன் அவர்கள் மற்றும் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் முன்னிலையில் விருதும் பரிசுத்தொகையும் நமது குழுவிற்கு வழங்கப்பட்டது. எங்கள் நலம் விரும்பிகள், நன்கொடையாளர்கள், ஆலோசகர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

Thirunagar Pakkam (Wish To Help Charitable Trust) team has won the Tamil Nadu Green Champion Award for Madurai District under Institution / NGO cadre. This award is given with a certificate and 1 lakh cash prize from Tamil nadu Pollution Control Board. Our team received this award from District Collector Mrs. Sangeetha, TNPCB ER. DR. Gunasekaran and District Revenue Officer.

Thanks a lot to all our supporters, Donors, Volunteers, Well-wishers etc.

 

Leave a reply