காணாமல் போன கேரள முதியவர் மதுரையில் மீண்டும் குடும்பத்துடன் இணைப்பு

காணாமல் போன முதியவர் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தார்

திரு. சுப்ரமணி (75) அவர்கள் வயது முதிர்வின் காரணமாக ஞாபக மறதி நோயினால் பாதிக்கப்பட்டு அவரது வீட்டை மறந்து தெருக்களில் ஆதரவின்றி சுற்றி திரிந்து தவித்து வந்தவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து முதியவரை மீட்டு பின் காவல்நிலையத்தில் விசாரிக்கையில் அவருக்கு ஞாபக மறதி இருந்ததை அடுத்து நமது அடைக்கலம் இல்லத்தில் சேர்த்துள்கொள்ள கேட்டதற்கிணங்க கடந்த 06.10.2021 அன்று அனுமதிக்கப்பட்டார்.

பின் நமது அடைக்கலம் முதியோர் இல்லத்தில் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்ட அவருக்கு அமைதியான சூழலும், அரவணைப்பு, மருத்துவ உதவியும், உணவும் வழங்கப்பட்டதில் அவர் சற்று இயல்பு நிலைக்கு திரும்பிய பின் அவரின் இருப்பிடம், குடும்பம் குறித்து விசாரிக்கப்பட்டது. அவர் சற்று தீவிரமாகவே ஞாபக மறதி நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.எனினும் அவர் அளித்த சில தகவல்களை கொண்டு – தான் கேரளா பாலக்காடு வடக்கன்சேரியை சேர்ந்தவர் மற்றும் அவரின் தந்தை, மனைவி, மகள் மற்றும் தங்கையின் தகவல்கள் பெற்றுக்கொண்டோம்.

இந்த தகவலினை அடிப்படையாக கொண்டு திருநகர் பகுதியை சேர்ந்த பொறியாளர் ரவி அவர்கள் அந்த முதியவரின் குடும்பத்தை கண்டடையும் முயற்சியில் இறங்கினார். பின் கேரளா வடக்கஞ்சேரியில் உள்ள சன் ரைஸ் ட்ராவெல்ஸ் நிறுவனத்தை தொடர்புகொண்டார். அவர்களுக்கு இந்த முதியவர் குறித்த தகவல்கள் பகிரப்பட்டு விசாரித்து குடும்பத்தை கண்டுபிடிக்க உதவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

வடக்கஞ்சேரி வாட்சப் குழுவின் உதவியுடன் சன் ரைஸ் ட்ராவெல்ஸ் உரிமையாளர் முதியவரின் குடும்பத்தை கண்டுபிடித்து அவர்களின் தகவல்களை நம்மிடம் பகிர்ந்தார். பின் பொறியாளர் ரவி அவர்கள் காணாமல் போன முதியவரின் குடும்பத்தை தொடர்புகொண்டு, தங்களை விட்டு காணாமல் சென்று முதியவர் சுப்பிரமணி தற்போது திருநகர் அடைக்கலம் முதியோர் இல்லத்தில் உள்ளதையும் தெரிவித்து பின்,  அவர்களை அழைத்து செல்ல ஏற்பாடுகள் மேற்கொண்டார்.

இதன் அடிப்படையில் திங்கள் 11.10.2021 அன்று சுப்பிரமணி (75) அவர்களின் குடும்பத்தார்கள் கேரளாவில் இருந்து நமது அடைக்கலம் முதியோர் இல்லத்திற்கு வருகை தந்து மீண்டும் அழைத்து சென்றனர்.

இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மிக்க நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

காணாமல் போனவர்களை சேர்த்துவைப்பதில் பொறியாளர் ரவி அவர்கள் மேற்கொண்ட முயற்சியில் தங்கள் குடும்பத்துடன் சேர்த்துவைக்கப்படும் நபர்களில் வெற்றிகண்ட நிகழ்வுகளில் இது நான்காவது நிகழ்வு. அவருக்கு எங்கள் அடைக்கலம் ஆதரவற்றோர் முதியோர் இல்லம் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

Missing Old Man Reunited from Tamilnadu(Madurai) to Kerala

Missing old Man Mr.Subramani(75) from Kerala(Vadakkencherry) Reunited with his family at Tamilnadu (Madurai).

Adaikkalam oldage home received a Aged person Mr. Subramani (75) from Subramaniapuram Police Station, who has unknowingly roaming on the streets for many days repoted by local residents.
Adaikkalam oldage home running for destitute aged adopted him on 06.10.2021.

On approaching him it is found that he is affected by memory loss(Mild cognitive impairment). He couldn’t convey his right location were he resided. Mr. Ravi an civil engineer also a talented person in reuniting the Missing, taken charge in this case.

Through the clue given by Mr. Subramani his location as Vadakkancherry, Palakad, kerala, Mr.Ravi tried to find his family and at last approached a Travels company – Sunrise Travels at Vadakkencherry with the help of GOOGLE. Mr. Prasath Sun rise Travels owner and his friend Mr. Vignesh Came forward to help reach the Missing old man’s family.
By sharing the missing details in vadakkancherry whatsapp group, Sunrise Travels owner and some of his friends got the old man family details and reached them successfully.
Er. Ravi got their family contact details and conveyed the missing details with their family on 08.10.2021.
On 11.10.2021 Mr. Subramani’s sister and relatives reached Madurai – Adaikkalam old age home.
Successfully reunited the Missing Old and MCI affected Mr. Subramani with his family.
We sendoff them by arranging to depart at kerala through bus.

We thank all who all are supported to rejoin Mr.Subramani with his family.

This is 4th rejoining activity lead by Er. ravi. We thank his involvement in rejoining the missing.

Regards
Adaikkalam oldage home
www.wish2helptrust.org

4 Comments

  • Sivaneriselvan. S
    Posted October 11, 2021 7:00 pm 0Likes

    வாழ்த்துக்கள் அடைக்கலம் முதியோர் இல்லத்திற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றியும் வாழ்த்துக்களையும் மிகவும் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • manager
      manager
      Posted October 15, 2021 7:38 pm 1Likes

      நன்றி அண்ணன்

  • Udayakumar
    Posted October 11, 2021 11:13 pm 0Likes

    இன்று முதல் பொறியாளர் ரவி அவர்கள் டிடக்டிவ் ரவி என்று அன்போடு அழைக்கப்படுவார்…

    • manager
      manager
      Posted October 15, 2021 7:38 pm 1Likes

      நன்றி அண்ணன்

Leave a Reply to manager Cancel reply