Dancing bear story / நடனக்கரடியின் கதை இது

Dancing bear story / நடனக்கரடியின் கதை இது

இந்த கட்டுரை பெங்களூருவில் உள்ள பன்னேர்கட்டா வைல்டு லைஃப் எஸ் ஓ எஸ் – கரடிகள் மறுவாழ்வு மையத்தில் 2018 மற்றும் 2022 ம் வருடத்தில் ஊர்வனம் குழுவுடனான பயண அனுபவத்தை பகிர்கிறேன்.

This short write up gives you my experience on a visit at Bannerghatta Wildlife SOS Sloth Bear Rehabilitation Centre with our Urvanam Team mates in the year 2018 and 2022.

நானும் தேன் கரடியும் – மாணவப் பருவத்தில் (Me and Dancing Bear- My Childhood days)

அப்போது நான் பள்ளிச் சிறுவன் மதுரையின் தெருக்களில் கரடியை வைத்து வேடிக்கை காட்டுவதை பார்த்து ரசித்ததுண்டு. அதன் பின்னே தெரு முழுதும் பின்தொடர்ந்து நடந்து செல்வேன், அது நான்கு கால்களில் அசைந்து அசைந்து, வேடிக்கை காட்டுபவரின் பின்னால் செல்லும். கருத்த உடல் மயிர், வலதும் இடதும் அசைந்து அசைந்து செல்லும் போது பார்ப்பதற்கு அச்சமாக இருந்தாலும் அதனை இயக்குபவர் அதனை ஆடவைக்கும் போது அச்சம் தொலைத்து ஆட்டத்தை கூட்டத்தோடு ரசித்தது உண்டு.

I was doing my schooling in Madurai, were i have experienced Sloth bear dancing in the streets in one holiday. Were i walked through the bear in excitement of seeing its dance. Also feared about its black furry body which moves right to left and left to right while it walks on four legs. Claws in the paws.

POP art by Ramanan sir
POP art by Ramanan sir

ஆம் மென்மையான சதையின் வழியே முகவாய் நுழைந்து மறு துவாரம் வாய் வழி போகும் கயிறு மறுமுனை கரடியை ஆட்டுவிப்பவரின் கையில். சுண்ட சுண்ட எழுந்து ஆடும், ஒரு கால் மறுகால் என தாவி தாவி ஆடும். பின்னங்கால் இரண்டையும் உந்தி தாவும். கையில் இருக்கும் பிரம்பு அதனை ஆட்டி வைக்கும். பார்ப்பதற்கு கரடி நடனம் ஆடுவது போல் இருக்கும், ஆனால் அது மூக்கு கயிற்றின் அழுத்தம் காரணமாக வலியால் துடிப்பது பின் வளர்த்தபின் தான் உணர்ந்தேன்.

Delicate muzzle punched with hot iron rod and a rope passed through it and tied at the end. Other end will be in the hands of a show maker who is the the owner and lease taker of the bear. When the rope is pulled due to pain the bear stands up and jump, which we say as it dances. Also to keep it fierce the charmer will hold a stick all the time. Many covered with a leather plaster around its mouth or muzzle.

சிறு வயதில் இருந்து தொலைக்காட்சியில் டிஸ்கவரி Discovery சேனல் தான். எப்போதும் விலங்குகள் குறித்து பார்ப்பது மட்டுமே பிடிக்கும். அதில் ஒரு நிகழ்ச்சி Dancing Bears Of India.

In childhood days i mostly spend my time in watching Discovery channel, Animal Planet. I have also seen a series called Dancing Bears of India.

அண்ணன்களும், அக்காக்களும் சிலர் கரடியை வைத்து வித்தை காட்டுபவர்களிடம் இருந்து கரடியை மீட்டு மறுவாழ்வு கொடுப்பது. கரடிகளுக்கு மட்டும் மறுவாழ்வு இல்லாமல், கரடிகளை வைத்து வித்தை காட்டி பிளைக்கும் களந்தர் எனும் நாடோடி இனத்திற்கும் மறுவாழ்வு மாற்று வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பது போன்ற முயற்சிகள் கரடிகளை பாதுகாக்கவும், அதை வைத்து பிழைப்பு நடத்தி இனக்குழு மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் உதவியது.

In this series a group of youngsters with department involve in rescue of Sloth bear from Khalander community who often use them for their livelihood by involving bear in charming. Its a team called Wildlife SOS which started its bear rescue and rehabilitation services and also uplifting the livelihood of Khalander community.

2018 ன் பயண அனுபவம் (2018- Visit at Wildlife SOS – Bengaluru)

இந்த பயணம் குரு பிரசாந்த் ஏற்பாட்டில் நானும் சாம்சனும் இணைந்து கொண்டோம்.
எங்களை திரு. கோபி Gopi Janarthanan அவர்கள் புன்சிரிப்போடு வரவேற்கிறார்,உடன் ஸ்ரீதர் Sridhar Elango அவர்களும்.

This visit to Wildlife sos has been initiated by Guru Prasanth, were myself and Samson joined with him. There Wildlife SOS senior volunteer Mr. Gopi took us to the bear rehabilitation centre.

எங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறோம். அறிமுகம் திரு. கோபி அவர்களை இன்னும் நெருங்கிய உறவாக்கியது. ஆம் இருவரும் ஒரே பள்ளிக்கூடத்தில், கணக்கியல் (Accountancy) துறை.
திருநகர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி , மாணவர்கள். நான் ஒரு வருடம் இளையவன்.

Gopi and myself introduced ourself and get closer that we both were done our schooling at same school.

பன்னேறுகட்டா உயிரியல் பூங்காவில் நம்மை Wildlife SOS அழைக்கிறது.
உள்நுழையும் வரை ஏதும் தெரியவில்லை. கரடிகள் நம்மை வரவேற்கிறது. சரி ஜூ வுக்குள் கரடி என்று நினைக்கும் தருவாயில்.
அங்கு ஒவ்வொன்றையும் நமக்கு அழகாக விவரிக்க தொடங்கினார் திரு. கோபி. அவர் அங்கு பகுதி நேர தன்னார்வலாராக பல ஆண்டுகளாக சேவை செய்து வருகிறார், நிதி உதவி பெறாமல். அதற்காக நன்றியும் வாழ்த்துகளும் கோபி அண்ணன்

Bannerghatta National park invited us and we entered into the sloth bear rehabilitation Centre. Mr. Gopi explained the services rendered by Wildlife sos.

பன்னேறுகட்டா உயிரியல் பூங்காவில் சுமார் 67 ஏக்கர் நிலத்தில் வனவிலங்குகள் (கரடிகள், புலி) மறுவாழ்வு மையம் Wildlife SOS க்கு அரசு ஒப்பந்த அடிப்படையில் வழங்கி உள்ளது. இது குறிப்பிட்ட ஆண்டுகளில் புதுப்பித்துக் கொள்ளவேண்டுமாம்.

This Rehabilitation Centre has been built in 67 acres of forest land under zoological park. This land is given by government under agreed lease and which shall be renewed periodically.

கரடிகளும் கலந்தர்களும் (Khalanders and Dancing Bear)

களந்தர் இன மக்கள், ஒரு நாடோடி இனக்குழு. இவர்கள் 400 ஆண்டுகளுக்கும் மேலாக கரடிகளை வைத்து வித்தை காட்டி பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.

Khalander community people are Nomadic tribe, were they have an historical record of practicing this bear dance 400 years above. They do this for their livelihood.

வேட்டைக்காரர்கள் (வன விலங்கு கடத்தல் காரர்கள்) காட்டுக்குள் சென்று தாய் கரடியை விரட்டிவிட்டு அல்லது கொன்றுவிட்டு குட்டியை நகரத்திற்கு எடுத்து வந்து களந்தர்களிடம் சில ஆயிரத்திற்கு விற்றுவிடுவார்கள். பின் களந்தர்கள் கரடிகளை வித்தை காட்டுவதற்கு தயார் செய்வார்கள்.
ஆம் வன விலங்கு என்பதால் அதை அடக்கி வைக்க மோசமான முறையை கையாள்கிறார்கள்.

Khalanders get Cub of Sloth bear from hunters and poachers, from which they raise the cubs and transform them as a dancing bear by various painful training.

பழுத்த காய்ச்சிய இரும்பு கம்பியை கொண்டு அதன் மெல்லிய முகவாய்ப்பகுதி சதைப்பகுதியில் துளை இடுகிறார்கள், பின் அந்த துளை வழியே கயிறு நுழைத்து ஒரு முனை கட்டப்படுகிறது. மறுமுனை வித்தை காட்டுபவரின் கையில். சிலர் மூக்கில் வளையம் இட்டு அதில் கயிற்றை இணைகிறார்கள்.

Hot iron poker are used to hole the muzzle and a rope inserted forcefully and tied. This wound will be used to create pain and train method to obey its masters command.

கோரைப்பற்கள் உடைக்கப்பட்டு அல்லது நொறுக்கப்பட்டு பற்கள் மழுங்கடிக்கப் படுகிறது, வாய் தோல் கயிற்றால் கட்டப்பட்டிருக்கும்.

muzzle wounded mark
muzzle wounded mark

Tooth is broken and the mazzle is covered with a band to control the mouth opening.

குதித்து பழக்க(நடனம்) சூடான நெருப்பு கங்கில் நிற்கவைத்து குதிக்க பழக்குவர் (கங்கின் சூட்டை அதன் பாதம் தாங்காமல் குதிக்கும்). பிரம்பு குச்சியால் அடிப்பதும், மூக்கு கயிற்றை இழுத்து காயத்தால் வலி உண்டாக்கி அதை அடக்குவது போன்றவைகளை செய்து கரடியை பழக்குவர்.

To practice the dance they use hot burning charcoal and make stand the bear. They use bamboo stick to beat, jerk the rope connected with mazzle to create pain and obey.

ஆண் கரடி குட்டிகளுக்கு மயக்க மருந்து செலுத்தப்படாமல் ஆண்விதை நீக்குதல் மூலம் கரடிகளின் மூர்கத்தனத்தை குறைப்பதும், கட்டுப்படுத்துவதும் நிகழ்த்தப்படுகிறது.

Male cubs are castrated without administering anaesthesia to raise the bear controlled activity.

குறைந்த அளவும், ஊட்டச்சத்து இல்லாத உணவால் கரடிகள் மோசமான சூழலில் வளர்த்தெடுக்கப் படுகிறது.

Limited food, Nutrition less diet followed to the bears which they tame.

பின் ஊர் ஊராக, வீதி வீதியாக கரடியை அழைத்து சென்று வித்தைக்காட்டி பிழைப்பு நடத்தப்படுகிறது. ஒரு கரடி மொத்த மனித(வித்தை காட்டுபவர்) குடும்பத்திற்கும் வாழ்வாதாரமாக இருக்கின்றது, அதுவே பணம் சம்பாதித்து கொடுக்கிறது.

Then once the bear attains or ready to take tour to perform charming dance Khalander travel with bears to villages and urban human settlements.

கரடியை ஆடவைக்க மூக்கில் கட்டப்பட்ட கயிற்றை இழுக்க அது எழுந்து நின்று ஆடுவதுபோல் வழியால் துடிக்கும். அதை ஊர் கூடி கொண்டாடி மகிழ்க்கிறது, இந்த ஆட்டத்திற்கு சில்லறைகள் கிடைப்பது வருமானமாகிறது. மேலும் கரடியின் முடி, நகம் மற்றும் பற்களை வைத்திருந்தால் நன்மை நடக்கும் என்று இவற்றை மக்களிடம் விற்கவும் செய்வார்கள்.

To make dance the bear the charmer uses the rope control, by which he make it to stand in two legs, move legs up and down for dance. For this movement the crowd favor some coins for this entertainment. Also they sell bear hair, claws which people believe to be auspicious when tied as thayathu. This is their prime livelihood for Khalander community,

இந்த சூழ்நிலையில் தான் வைல்டு லைப் எஸ் ஓ எஸ் என்ற தொண்டு நிறுவனம் கரடிகளின் மீது நிகழ்த்தப்பட்டுவரும் கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு களத்தில் வனத்துறையுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள்.

In this situation Wildlife SOS an NGO stepped in to stop Sloth bear dancing practice and conserve it with the support of Forest department.

சுமார் 600 நடனத்திற்கு பழக்கப்பட்ட கரடிகள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கரடிகள் நான்கு (ஆக்ரா, பெங்களூரு, போபால் மற்றும் மேற்கு வங்கம்) மறுவாழ்வு முகாம்களில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

Total of 600 bears are recued and rehabilitated at rehabilitation centres at Agra, Bengaluru, Bhopal and West bengal).

சித்ரா எனும் கரடி தான் இந்தியாவில் மீட்கப்பட்ட கடைசி நடனம் ஆடும் கரடி என்கிறார்கள்.

As per their record Chitra is the last dancing bear rescued from this community.

இந்த கரடிகளை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ள கலந்தர் இன மக்களிடம் இருந்து கரடிகளை மீட்டபின், அவர்கள் வாழ்க்கையை நடத்திட சிறு தொழில் செய்வதற்கான பண உதவி மற்றும் தொழிற்பயிற்சிகளும் வழங்கி மறுவாழ்வுக்கான உதவிவிகளையும் வைல்டு லைப் எஸ் ஓ எஸ் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. மேலும் கரடி வைத்துள்ளவர்கள் தாங்களாகவே முன் வந்து கரடிகளை ஒப்படைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சில ஆயிரம் பண உதவியும் வாழ்வாதார மேம்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. கலந்தர் இன மக்களின் குழந்தைகள் கல்விக்காகவும், பின்னாட்களில் அவர்கள் கரடிகள் கொண்டு வித்தைகாட்டுபவராக வளர்ந்துவிட கூடாது என்பதால் அவர்களின் அடிப்படை வாழ்க்கை தரம் உயர பல திட்டங்கள் கலந்தர் இன மக்கள் கிராமங்களில் செயல்படுத்தியும் வருகின்றனர்.

Khalanders who depend on the sloth bear for their livelihood must not be affected after the handover of their tamed bears. So that Wild life SOS also focusing on to create sustainable life support by self employment. This is done by funding to start a small business and also training given to them to start a business. Children are encouraged to continue their studies and supports are made in skill development. They also receive financial support for Uniform, books, fees etc. This is done to keep away a khalander child from dancing bears.

காப்பகத்தில் தினமும் அவைகள் விளையாட்டு, உணவு, பராமரிப்பு, மருத்துவ சிகிச்சைக்கு உதவியாளராக என கரடிகளின் நலன் சார்ந்து பல பணிகளில் கலந்தர் இன மக்கள் முகாம்களில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

In Rehabilitation centres the bears have play time, good nutricious food, care, hospitality with the employees supported from the Khalander community. They are involved in rehabilitation activity.

இதுபோல் மீட்கப்படும் கரடிகள் பொதுவாக மீண்டும் காட்டுக்குள் விடப்படுவதில்லை. காரணம் காட்டில் போராடி மற்றும் வேட்டையாடி வாழ கற்றுக்கொடுக்கும் தாயிடம் இருந்து குட்டியிலேயே பிரித்து எடுத்து வந்து, மனிதர்களால் வளர்க்கப்பட்டதால் . அவைகளால் காட்டில் உயிர் வாழ்ந்திட இயலாது. ஆகவே அவைகள் தங்கள் கடைசி காலம் வரை மறுவாழ்வு மையத்தில் மகிழ்ச்சியாக வேலைக்கு உணவும், விளையாட்டும் என நாட்களை கழிக்கிறது.

The rescued bears cannot be released in wild because these sloth bears are raised from human hands and they don’t have ability to survive in the wild. Forcefully human made their wilderness and made them domesticated, also physically weak. They stay life long in the rehabilitation centres.

இதில் வேதனை என்னவென்றால் மீட்கப்பட்டு வந்து பல ஆண்டுகள் கடந்த பின்னும் நிறைய கரடிகள் மையத்தில் நடனமாடும் இயல்பு மறக்காமல் வலி கொடுக்கப்படாமலே ஆடிக்கொண்டிருந்ததை கண்டு மனம் துயருற்றது.

A sad scene which i saw some bears even after several years of rehabilitation they have not forgotten the dancing behaviour.

குறிப்பாக மறுவாழ்வு மையம் கூண்டுக்குள் அடைப்படுவதாக இல்லாமல் மிகப்பெரிய வனப்பகுதியில் பாதுகாப்பு வேலி எல்லைக்குள் அவைகள் காட்டில் வாழ்வது போல் வாழும் சூழல் அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு.

This rehabilitation Centre is not in caged infrastructure, rather they give a wide space like forest were the bears roam in a large area of acres.

மரங்கள் சூழ்ந்த அடர்வனக்காடு, காய்ந்த மரக்கட்டைகள் கொண்டு சாரம் அமைத்து கரடிகள் ஏறி இறங்கி விளையாடும் அமைப்பு, தொங்கவிடப்பட்டுள்ள வடமும் (சணல் கயிறு) , டயரும் ஊஞ்சல் ஆடிட, குளித்து ஆட்டம்போட குளங்கள் என அந்த மறுவாழ்வு முகாம் ஒரு வனச்சூழல் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

Dense vegetation and also woods collected and buit like stares lofts were bears climb and play. Ropes and tyres hanged from tree were the bears swing and play. Its a place were bears get actual rehabilitation with more activities to stay healthy and wild more.

தினமும் உணவு நேரத்திற்கு தவறாமல் தன் அறைக்கு வந்துவிடுகின்றன. சில நேரங்களில் ஒரு சில கரடிகள் காட்டுக்குள் சென்று திரும்பி வர தாமதமாகுமாம், சில நாட்கள் கூட ஆகுமாம். காரணம் கேட்டு வியந்தேன். சில பருவத்தில் அதன் விசேச உணவுகளான ஈசல் அல்லது தேன் காரணமாகவும். மரத்தில் ஏறி இரங்கமுடியாமலும், கீழே விழுந்து காயம் அடைந்ததாலும் தன் அறைக்கு வராமல் போகுமாம். இதனை அதன் பராமரிப்பாளர்கள் காட்டிற்குள் (வேலியிட்ட காட்டுப்பகுதி) சென்று மீண்டும் அழைத்து வருவார்கள்.

They are punctual in feeding time, is seen at their arrival to the feeding place. Curator said that some may not return from the forest it may be due to seasonal food availability like flying termites, honey or fruits. Some time after climbing the tree they could not able to reach the floor, or gets injury some times. In this situation the rehabber will go in search of the bear and  them.

பசுமை அடுப்பங்கரை – எரிபொருள் சிக்கனம், உயிர்ப்பொருள் மூலப் பொருள் கொண்டு உணவு தயாரிக்கும் அடுப்புகள் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. சுத்தமாகவும் சுகாதாரமாகவும் காணப்படும் அடுப்பங்கரை குறிப்பிட்டு சோலா வேண்டும்.

Biomass based cook stoves installed Green Bear Kitchen adds a naturally safe kitchen. Also the kitchen are maintained hygiene and clean.

வனப்பகுதிக்குள் மையம் அமைந்துள்ளதால் சோலார் மின்சக்தி பொருத்தப்பட்ட வளாகமாக இது உள்ளது.

The premises has Solar powered electricity system due to forest area.

ஒவ்வொரு காரடிக்கும் பெயர் சூட்டுவது, கவனிப்புக்கு தனி நபர்கள் அமர்த்துவது, அவைகள் கூட்டாக வாழ பயிற்சிகள், விளையாட்டுப் பயிற்சிகள். இதில் ஒரு விளையாட்டினை கூற விரும்புகிறேன் – பராமரிப்பாளர் மரத்தின் மேல் உயரமாக உள்ள கிளையில் தேனை தடவி விடுவதும் கரடி தேனின் வாடைக்கு மரத்தில் ஏறுவதும் இறங்குவதும் என உடற் பயிற்சியாக இந்த நிகழ்வு அமைவதும் கரடியின் உடலை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

Each bear is named, individual staff allocated to monitor their behaviour, care, feed etc. I want to note a play usually practiced in the Centre is honey is putted in a trees high branch, which a bear smells and finds the honey by climbing the top of the tree as a excercise.

இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்கப் படுவதில்லை. கரணம் அவைகளின் பலவீனமான உடல் ஆகையால் பலவீனமான குட்டி ஈனுதல், சில சமயம் குட்டி இறந்து பிறப்பது, மனிதர்களின் பராமரிப்பில் வளர்ந்ததால் இயல்பாக தாய்க்கு குட்டியை கவனிக்க தெரியாமல் போவதும் குட்டி இறப்பதும் போன்றவை நிகழ்கின்றது.

Breeding is not allowed due to their lost wild behaviour or the mother has no physical or mental ability to carry a baby or raise its baby. Many cubs born die or mother fail to milking the cub or care.

ஒவ்வொரு கரடிக்கும் தனி தனியே விவர குறிப்புகள் சரியாக பதிவது(வந்த நாள் முதல், மருத்துவ சிகிச்சை, தடுப்பூசிகள், எடை.

Each bear has reigisters containing details of history from its entry to the present with medical records and behaviour study.

உணவு சமைத்து அதற்கு கொடுக்கும் முறை. கரடியின் அறைகள் உணவு வழங்கிடும் இரு வேலையும் தண்ணீர் விட்டு நன்கு சுத்தம் செய்த பின் ஏழு – எட்டு லிட்டர் திரவ உணவை தட்டில் ஊற்றி வைக்க கரடிகள் தங்கள் அறைக்குள் வந்து உறிஞ்சு குடிக்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 15 கிலோ வரையில் உணவு எடுத்துக்கொள்கிறது. அதுபோக பழங்கள், தேன் போன்றவைகளும் சிறப்பு உணவாக வழங்கப்படுகிறது.

Bear feeding block is regularly cleaned each day two times of feed time. Bears feed 7 to 8 kg of liquid food. Also fruits and honey are fed additionally which they like more.

2018 ல் பின் நமக்கு தேவையான விலங்குகள் மீட்பு மற்றும் முதலுதவி குறித்து விரிவான விளக்கம் அளித்தார் தலைமை மருத்துவர் திரு. அருண் அவர்கள். சிறப்பாக விளக்கினார். நன்றிகள் பல அவருக்கு.2022 ல் மரு. ஸ்ரீராம் மற்றும் மரு. ஹர்ஷ் இருவரும் நவீன மருத்துவ கருவிகள் மற்றும் கரடிகள் பராமரிப்பு குறித்து விளக்கினர்.

We thank to Dr Arun who overview the treatments facility and methods carried out in this centre in 2018 and also in 2022 Dr.Sriram and Dr. Harsh about the latest medical treatment equipment’s and their usages.

2018ல் மீட்கப்பட்டு மறுவாழ்வு மையத்தில் வாழ்ந்து வரும் 3 புலிகளை கண்டோம். சுமத்திரா புலி, வங்காலப்புலி காண வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு புலி ஓரு மனிதரை கொன்று விட்டதாம்.இந்த முறை 2022ல் அங்கு ஒரு புலி மட்டுமே மறுவாழ்வு மையத்தில் இருந்ததை கண்டு வந்தோம்.

 

Wildlife_SOS
கார்த்திக் சத்யநாராயணன் (Mr. Karthik Sathyanarayanan)
கீதா சேசாமணி(Geetha Seshamani)
கரடிகளை கொண்டு வித்தை காட்டும் வழக்கம் முற்றிலும் ஒழிய இவர்கள் தான் முன்நின்றவர்கள்.

These two people initiated to stop the barbaric practice on Sloth bear by founding Wildlife SOS organisation.

கரடிகளின் பராமரிப்புக்கு தங்களால் இயன்ற உதவிகளை நீங்களும் கொடுக்க முன்வரலாம்

Support Wildlife SOS through your donations to take care Sloth bears in rehabilitation Centre

https://wildlifesos.org/

https://e-activist.com/page/16138/donate/1

2022 ல் ஊர்வனம் குழு நணபர்கள் ஸ்ரீநிவாசன், சுப்பு, சிவா ஹர்ஷன் மற்றும் வித்தோஷ் குமார் உடன், திரு. கோபி அவர்களின் உதவியுடன் உள்ளே அனுமதியும் விழிப்புணர்வும் பெற்றோம்.

In 2022, we as a team with Mr. Srinivasan, Mr. Subbu, Mr. Siva harshan and Mr. Vithosh kumar

திரு. கோபி ஜனார்த்தனன் அவர்களின் இந்த பேருதவிக்கு நன்றி, பெரும் அனுபவம் கிடைக்க செய்த நபர். நமது அடுத்தகட்ட நகர்வுக்கான ஆலோசனை வழங்கும் தன்னலமற்ற நபரை வாழ்த்துகிறோம் நன்றி.

Thanks to Mr. Gopi janarthanan for your Selfless support in sharing knowledge and giving and creating opportunity to learn.

உலகத்தில் எட்டு கரடி இனங்கள் உள்ளன, அவைகளில் தென் கரடி இந்திய துணைக்கண்டத்தில் பரவலாக காணப்படும் ஒரு இனமாகும். இவைகள் மிகவும் அழிவின் விளிம்புலும் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரின பட்டியலில் உள்ளது.

Its an IUCN red listed species. These bear are found widely in Indian sub continents. There are 8 species of bears in the world. Lets conserve Sloth bear.

Writer

Vishwanath.P.R
Urvanam Nature and Wildlife Conservation Team
9940832133, 8608700088

Leave a reply