தூய்மையான மதுரை மாநகராட்சி – மக்கும் குப்பை மக்காத குப்பை விழிப்புணர்வு

மக்காத குப்பைகளை குறைத்து, மக்கும் குப்பைகளை உரமாக்க தூய்மையான் மதுரை மாநகராட்சி என்ற இலக்கை நோக்கி அரசுடன் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க ஒவ்வொரு மாதமும் 2ம் சனிக்கிழமை நாளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சா

ர்பில் மதுரை மேயர், மண்டல உறுப்பினர், ஹார்விபட்டி வார்டு உறுப்பினர் மற்றும் ஆணையாளர், மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் நடைபெறுகிறது. இதில் தொடர்ந்து நமது திருநகர் பக்கம் குழுவும் பங்கெடுத்து வருகிறது.

இன்று 25.06.2022 ஹார்விபட்டி பகுதியில் நடைபெற்றது.  நமது திருநகர் பக்கம் குழு தன்னார்வலர்கள் கலந்துகொண்டு நடைபெற்ற நிகழ்வில் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். மேலும் மண்புழு உரம் தயாரிப்பு தொழிற்சாலை பார்வையிடல் மற்றும் தயாரிப்பு முறைகளை அதிகாரிகள் விவரிக்க அறிந்து கொண்டோம்.

தொடர்ந்து பயணிக்க இணைந்திடுக
திருநகர் பக்கம் : Thirunagar People Page
9940832133, 8608700088

Leave a reply