Welcome to Wish2helptrust! Call us @ +91 9940832133 and email us @[email protected]

Urvanam

நீங்களும் ஆராய்ச்சியாளர்(விஞ்ஞானி)  ஆகலாம்! / Citizen science through Season watch

நீங்களும் ஆராய்ச்சியாளர்(விஞ்ஞானி) ஆகலாம்! / Citizen science through Season watch

நீங்களும் ஆராய்ச்சியாளர் (விஞ்ஞானி) ஆகலாம்! ஆம், அதன் அடிப்படையில் நிகழ்ந்த களப்பணி தான் இன்றையது. நம்மை சுற்றி இயற்கையில் நிகழும் நிகழ்வுகளை காணச்செய்வது, காண்பதோடு கடந்துவிடாமல் அவற்றை பதிவு செய்வது, பதிவு செய்வதென்றால் அதை எப்படி செய்வது, அப்படி பதிவு செய்வதால் என்ன பயன், யாருக்கு பயன் என்று அப்படியே மரங்களின் அருகே அனைவரும்…

Learn More

Snake Rescuers Meet / பாம்பு மீட்பாளர்கள் சந்திப்பு 2022

Snake Rescuers Meet / பாம்பு மீட்பாளர்கள் சந்திப்பு 2022

Bilingual Post – இருமொழிப்பதிவு – Tamil – தமிழ் – English – ஆங்கிலம்  Snake Rescuers Meet 2022 / பாம்பு மீட்பாளர்கள் சந்திப்பு 2022 தமிழ் நாட்டின் பாம்பு மீட்பாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி மீட்பு களத்தில் மீட்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பாம்பு மீட்பாளர்களின் பாதுகாப்பு, அவர்களின் திறன் வளர்க்கும் தேவையான…

Learn More

சேமட்டான்குளத்தில் 40 பறவை இனம் / 40 bird species recorded at Semattankulam tank

சேமட்டான்குளத்தில் 40 பறவை இனம் / 40 bird species recorded at Semattankulam tank

*40 bird species recorded at Semattankulam tank* சேமட்டான்குளம் கண்மாயில் பறவைகள் காணல் மற்றும் கணக்கெடுப்பு 2022 நாள் 13.02.2022, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 9 . 30 மணி வரை கலந்து கொண்டவர்கள்: விஸ்வநாத், கோடீஸ்வரன், வித்தோஷ குமார், நவீன் பாரதி, விஷ்ணு, அருண், கீர்த்தி வாசன், வீரமணி,…

Learn More

கொக்குளம் கிராமத்தில் பாம்புகள் குறித்த விழிப்புணர்வு

கொக்குளம் கிராமத்தில் பாம்புகள் குறித்த விழிப்புணர்வு

கொக்குளம் – அயோத்திதாசர் நகர் – செக்கானூரணி மதுரையில் பம்புகளோடு இணக்கமாக வாழும் கலை – குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை அறிவுச் சமூகம் முன்னெடுப்பில் தமிழ்நாடு வனத்துறை – மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரி, உசிலம்பட்டி வனச்சரகர் வழிகாட்டுதலின்படி வனவர் திரு. லோகநாதன் அவர்களின் முன்னிலையில் ஊர்வனம் விலங்குகள் பாதுகாப்பு குழு கிராம மக்களிடத்தில்…

Learn More

உயிர் பிழைத்திருக்க உருமறை தோற்றம்

உயிர் பிழைத்திருக்க உருமறை தோற்றம்

உயிர் பிழைத்திருக்க உருமறை தோற்றம்

Trimeresurus (Craspedosephalus) Travancoricus

மரங்கள் அடர்ந்த காடுகளை கொண்ட மேற்குத்தொடர்ச்சி மலையின் உச்சியில் சுமார் மூவாயிரம் அடி உயரத்தில் நாங்கள் முகாமிட்டிருந்தோம்.

எப்போதும் போல் இரவு நேர காட்டுலாவிற்கு தயாரான குழு, அன்று எங்கள் பயணம் மலையில் வழிந்தோடும் ஒரு சிற்றோடையை அடைவதாக தீர்மானிக்கப்பட்டு நகரத் தொடங்கியது.

சிற்றோடையின் கரைகளில் வளர்ந்திருந்த உயர்ந்த மரங்களால், நிலவின் ஒளி நிலம் தொட முடியாத காரிருள் சூழ்ந்த வனமாக காட்சி தந்தது. தவளையின் அழைப்பொலியும் நீரின் சலசலப்பில் அடங்கியிருந்தது.

அந்த இருள் சூழ்ந்த வனத்தில் எங்களை வழிநடத்தும் கைமின் விளக்குகள் மற்றும் நாங்கள் தலையில் பொறித்தியிருந்த தலைமின் விளக்குகள் துல்லியமாக முன் இருப்பவைகளை காட்சிப்படுத்திக் கொண்டிருந்தது.

நீரின் வழித்தடம் எங்கும் கூழாங்கற்கள் இல்லை இல்லை கூழாம் பாறைகள் நிறைந்து காணப்பட்டன. உருண்டு திரண்டிருந்த பாறைகள் யாவும் பாசிப்படர்ந்திருந்தன. இளம் பச்சை, வெளிர் பச்சை, இளம் பழுப்பு, அடர் பழுப்பாக திட்டு திட்டாக அதனூடே கருமை நிறமும் இணைந்து மேற்சொன்ன வண்ணங்களில் காட்சித் தந்தன.

எதை காண வேண்டும் அல்லது எதை காணக்கூடும் என்று பயணம் தொடங்கும் முன்பே பட்டியலிடுவது காட்டியலாளர்களின் வழக்கம்.

எங்கள் பட்டியலில் அது இருந்ததால் ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்து வைக்கப்பட்டது, காரணம் அதன் தோற்றம். வழுக்கும் பாறைகளில் கால் இடறி கை தவறுதலாக கீழே அதன் மேலே வைக்கப்பட்டால் கணப்பொழுதும் தாமதிக்காமல் அது நம்மை தாக்கிடக் கூடும்.

குழுவில் ஒருவர் தனக்கு முன்னால் இருக்கும் ஒரு பாறை ஒன்றில் துல்லியமாக வெளிச்சத்தை காட்டி இதோ சட்டித் தலையன் என்றார்.

எப்போதும் போல் ஆர்வம் பீறிட்ரு. கவனமாக அதை நெருங்கி அனைவரும் கண்டோம்.

தான் வாழும் சூழலுக்கேற்ப உயிரியல் படிமலர்ச்சியின் கோட்பாடு அவ்வளவு கட்சிதமாக பொரிந்தியிருந்தது. அது கிடத்தியிருந்த தன் உடலும் பாறையின் நிறமும் அதன் வடிவங்களும் எளிதில் வேறுபடுத்திட இயலாத உருமறை தோற்றம் கொண்ட உயிரினத்திற்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு உயிரினமாக ஊர்வன வகையைச் சேர்ந்த இந்த டிரவங்கோர் சட்டித்தலையன் /குழிவிரியன் மிகச்சிறந்த உயிரினமாக கூறலாம்.

இந்த உருமறை தோற்ற இயல்பு என்பது அந்த உயிரினத்தின் வாழிடத்தில் வேட்டை விலங்காகவும், வேட்டை விலங்குகளிடம் இருந்து தற்காத்து கொள்ளும் இயல்பாகவும் இயற்கை தந்த உயிரின படிமலர்ச்சியின் வாழியல்பு.

படைப்பு

.பு. இரா. விசுவநாத்

இரண்டு முட்டைகள் வெட்டவெளியில்…..

இரண்டு முட்டைகள் வெட்டவெளியில்…..

அண்ணா! இரண்டு முட்டைகள் வெட்டவெளியில், சுட்டெரிக்கும் வெயிலில் கிடக்கிறது எடுத்து வரவா? பார்க்க பாவமாக இருக்கிறது என்றான் தம்பி பாரதி விக்னேஷ் . வேண்டாம்! முட்டைகளை கையால் தொடவோ, எடுக்கவோ வேண்டாம். முட்டையிடம் இருந்து சற்று விலகி வரவும், பின் தூரத்தில் ஏதேனும் பறவைகள்(பெற்றோர்) உள்ளதா என்று கவனிக்க சொன்னேன். பதில் அப்படி ஒன்றும்…

Learn More

அரத்தவளை (அ) தலப்பிரட்டை

அரத்தவளை (அ) தலப்பிரட்டை

அரத்தவளை (அ) தலப்பிரட்டையை மேகலையில் இயற்கையாக ஊற்றெடுத்து ஓடிவரும் நீரோடையில் கண்டதும் எனது சிறு வயது நினைவுகளை கிளரிவிட்டப்படி மனிதனின் வாழ்க்கை முறை மாற்றம் எவ்வளவு இயற்கை மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது என்ற எண்ணத்தை எழுப்பியது. ஆம் அப்போது நான் டவுசர் அணியும் வயது பையன் தான். வீட்டின் அருகே மழைக்கால இரவுகளில் சாலையில் தேங்கிய…

Learn More