வலை வீசி சிலந்தி Net Casting Spider (Deinopis sp) என்ற சிலந்தி டெய்னோபிடே
Deinopidae என்ற குடும்பத்தை சேர்ந்த இவை ஒரு இராவாடி சிலந்தி இனமாகும்.
காரிருள் சூழ்ந்த இரவில் கூட தன் கண்களின் சிறப்பான பார்வைத் திறன் வழியே இரையை வேட்டையாடும் சிறப்பியல்பு கொண்டது.
பெரிய வலையை பின்னி நடுவே இரைக்காக காத்திருக்கும் சிலந்தி போல் அல்லாமல், இவை செவ்வக வடிவ பட்டிலைப்பின்னல் வலை முனைகளை முன் கால்களில் பிடிமானம் கொண்டு அதன் வழியே இயக்கும். இது எப்படி இயங்கும் என்றால் மீன்களை நோக்கி மீனவன் வலை வீசுவது போல, இதன் வலைக்கு கீழே வரும் பூச்சியை எதிர்பாராத நேரத்தில், அசாத்திய வேகத்தில் வலையை விரித்து முன்னுக்கு தள்ளி இரையை பிடிக்கும். மேலும் பூச்சிகள் பறந்து வரும் சத்தத்தை உணரக்கூடிய வகையில் சிலந்திகளின் பட்டிலைகள் ஓசைக் கடத்தியாகவும் செயல்படுவதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.
இச்சிலந்தியின் செவ்வக பட்டிலை சாதாரண நிலையில் இருந்து 2 அல்லது 3 மடங்கு விரிவடைந்து சுருங்க வல்லது.
இவைகளை குறித்த ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப்படாத நிலையில் இவற்றின் வாழியல்பு குறித்த தகவல்கள் அறியப்படாமலேயே உள்ளது.
பூச்சிகளின் பெருக்கத்தை கட்டுக்குள் வைக்க உதவும் இதுபோன்ற அரிய வகைச் சிலந்திகள் பாதுகாப்பதோடு அதன் வாழிடங்களையும் மனிதர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.
Vishwa Wishtohelp
Spiders of India ( Arachnology) #spiderindia #spidersofmadurai #urvanam #biodiversitymanagementcommitte #arachnid #arachnology #spidersofinstagram #spidersoftheworld #madurai #biodiversity #பல்லுயிர் #சிலந்தி