Ramakrishna Balaji திரு. ராமகிருஷ்ணன் பாலாஜி அவர்களின் பாம்புகள் குறித்த கேள்விக்கு பதில்.
“என்ன பாம்பு கடித்தது என்று தெரியாத பட்சத்தில் எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும்?”
பதில் –
ஒருவருக்கு பாம்பு கடித்துவிட்டு பின் மறைகிறது. கடித்தது நஞ்சுள்ள பாம்பா இல்லை நஞ்சற்ற பாம்பா என்று சந்தேகம் எழுகிறது.
பொதுவாக கடித்த இடத்தை பார்த்து என்ன பாம்பு கடித்தது என்று அனுமானிபோம். அதில் ஒன்று கடிவாயில் இரண்டு பல் பதிந்த தடங்கள் இருந்தால் நஞ்சுள்ள பாம்பு என்போம். இதை கூறுவதற்கு காரணம் நஞ்சுள்ள பாம்பிற்கு இரண்டு துளையிட்ட நஞ்சுள்ள முன் பற்கள்(Fangs) இருக்கும். ஆனால் சில சமயங்களில் கடிவாயில் ஒரு ஆழமான பல் தடமும் பதிந்து இருக்கலாம். கடி தவறி ஒரு பல் பதிந்து இருக்கலாம் அல்லது பாம்பின் ஒரு நச்சு பல் உடைந்து போயிருக்க வாய்ப்பு உள்ளது.
அதே கடிவாயில் பல பற்களின் சீரான வரிசையில் கடியின் தடம் இருந்தால் நஞ்சற்ற பாம்பு என்று கூறுகிறோம்.
இதை எல்லாம் வைத்து நாம் உறுதியான முடிவுக்கு வருதல் கூடாது.
கவனிக்க வேண்டியவை
நஞ்சுள்ள பாம்பு
? கடித்த இடத்தில் அதிக வலியோ வீக்கமோ இருக்கும்.
? மூச்சு விட சிரமம் ஏற்படும்.
? குமட்டல் மற்றும் வாந்தி.
? கண் பார்வை மங்குதல்
? நாக்கு தடித்து, வாய் உலருதல்.
? அதிகமாக வியர்வை வெளியேறுதல் மற்றும் எச்சில் சுரத்தல்
போன்ற அறிகுறிகள் நஞ்சுள்ள பாம்புகள் கடித்தாவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.
இது விரியன் பாம்புகள் மற்றும் நல்ல பாம்பு, கட்டுவிரியன் பாம்புகளுக்கு மாறுபடும்.
உடனடி முதலுதவி
? கடி பட்டவரை தைரியம் கொடுத்து மன அமைதி காத்தல்.
? கடித்த உடல் உறுப்பு அசைவின்றி வைத்து கொள்ளுதல்.
? கையில் வளையல், வாட்ச், மோதிரம், காலில் கொலுசு, கயிறு போன்றவைகளை அகற்றிட வேண்டும்.
? 108 அல்லது வாகனத்தின் மூலம் அரசு மருத்துவமனை அழைத்து செல்லுதல் கால தாமதம் இன்றி.