தடகள வீராங்கனை மாணவிக்கு உதவி / Sponsoring Sports Girl

தடகளப் போட்டியில் சிறப்பாக தன் திறமையை வெளிப்படுத்திய திருப்பரங்குன்றம் வேடர்புளியங்குளம் அரசு பள்ளி மாணவிக்கு இன்னும் சிறப்பாக தன் விளையாட்டு திறமையை வெளிப்படுத்த நமது திருநகர் பக்கம் குழு சார்பில் ஸ்போர்ட்ஸ் ஷூ, ஜெர்சி மற்றும் லோயர் நேரில் அழைத்து சென்று பொருத்தமான விருப்பமானவை மாணவிக்கு வாங்கி வழங்கப்பட்டது.

ஒவ்வொரு கட்டத்திலும் எங்கள் குழு உறுதுணையாக இருப்போம் என்ற நம்பிக்கை வாக்கினை வழங்கி இன்னும் சிறப்பாக விளையாட்டில் திறமையை வெளிப்படுத்த வாழ்த்துகிறோம்.
குறிப்பு: சுட்டெரிக்கும் வெயிலில் காலணி அணியாத கால்களுடன் போட்டியில் பங்கேற்றும், மாணவியின் திறமையை அறிந்து நம்மிடம் உதவிக்கு அணுகிய பள்ளி ஆசிரியர் திருமதி. ராணி அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

திருநகர் பக்கம் குழு, மதுரை
8608700088
#Supporting_sports_kit_to_a_girl_student_studying_in_government_school

Leave a reply