உலக காட்டுயிர் தினம் 2020

காடு என்பதும், காட்டுயிர் என்பதும் எங்கோ உள்ளதென்றும் அதை பாதுகாக்க நான் என்ன செய்ய முடியும் என்றும் தானே நீங்கள் எண்ணுவது?

மனிதனால் காடு என்று வரையறுத்துள்ள எல்லைக்குள் வாழும் உயிர்களே காட்டுயிர் (தாவரங்களும் விலங்குகளும்) என்ற எண்ணம் தவறானது. அந்த மாயை உடைத்தெறிவோம்.

உங்களை சுற்றி நீங்கள் வாழும் சூழல் காங்கிரீட் காடாயினும், கிராமமாயினும் சிறு சிறு பூச்சிகள், சிலந்திகள், தாவரங்கள், பறவைகள், ஊர்வனங்கள், பாலூட்டிகள், மீன்கள் மற்றும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் வரை காட்டுயிற்களே என்று எண்ணுவோம்!

“மனிதனால் அடிமையாகப் பழக்கப்படுத்தப்பட்ட மனிதர்களுக்காக வாழும், மனிதர்கள் இன்றி வாழ இயலாத விலங்குகள், தாவரங்கள் தவிர்த்து, மனிதர்களின் உதவியின்றி மனித இனத்தின் நலனுக்காக, மனித இனமே இல்லை என்றாலும் வாழ்ந்து தலைக்கும் உயிர்களே காட்டுயிர்”.

மனிதனால் காட்டுயிர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது, வாழ்விடச் சூழல் பறிப்பு, உணவுக்காக, மருந்துக்காக, ஆடம்பர ஆசைக்காக பெரிதும் கொல்லப்பட்டு, கடத்தப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றது.

காட்டுயிர்களின் அழிவு சூழல் சமன்பாடு சிதைவு, விளைவு மனித இனத்தின் அழிவு!

காட்டுயிர் காக்க என்ன செய்யலாம்?
? உங்கள் வீட்டைச் சுற்றி உள்ள தாவரங்கள் விலங்குகள் நேசி.
?உன் வீட்டைச்சுற்றி உள்ள உயிரினங்களை அப்புறப் படுத்தாதே அணில், பல்லி, சிட்டுக் குருவி, ஓணான், தேனீ (எடு.கா).
? களை என அவசியமின்றி புல் புதர் தாவரங்களை அகற்றாதே.
?வீட்டில் பறவைகள் கூடு கட்டியிருந்தாள் அகற்றாதே.
? காட்டுயிர் மாமிசங்கள், ஆபரணப் பொருட்கள் வாங்கிப் பயன் படுத்தாதே! வளர்ப்பு விலங்காக வளர்க்காதே!
? காட்டுயிர் வேட்டையாடினால் தடு, கடத்தப் பட்டால் தகவல் கொடு!
? நஞ்சற்ற பாம்புகள் வந்தால் விடு, நஞ்சுள்ளவை வந்தால் தகவல் கொடு, அடித்துக் கொல்லாதே.
? காட்டுயிர்க்கு உணவு வழங்காத, உன் அடிமையாக்க முயற்சிக்காதே.
? சினிமாவையும், நாடங்கங்களையும், விளையாட்டையும், கலை பண்பாட்டை மட்டும் கொண்டாடாமல், கொண்டாடு “காட்டியிகளையும்! தினத்தில் மட்டும் அல்ல, தினந்தோறும்”

Leave a reply