முகவரி இல்லாத முதியவருக்கு முகவரி பெற்றுத்தந்த தருணம் / Enrolling AAdhaar for Destitute Elder

முகவரி இல்லாத முதியவருக்கு முகவரி பெற்றுத்தந்த தருணம்
அரசு வழங்கும் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க இயலாது, வங்கியில் கணக்கு தொடங்க இயலாது, அரசின் சலுகைகள் பெற இயலாது போன்ற பல சிரமங்கள் ஏற்படும்.
இது குறித்து திருப்பரங்குன்றம் பகுதியில் வாழ்ந்து வரும் ஆதரவற்ற முதியவர் வாழவந்தான் அவர்கள் அப்பகுதியில் பல வருடங்களாக மரக்கன்றுகள் நட்டு பராமரித்து, வளர்த்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் எங்கள் அடைக்கலம் ஆதரவற்றோர் இலவச முதியோர் #Adaikkalam_Old_Age_Home இல்லத்தை தொடர்பு கொண்டு ஆதார் பெற்று தர கோரினார். இதன் பின் மூத்த குடிமக்கள் உதவி எண் 14567 எண்ணிற்கு தொடர்புகொண்டு உதவியை நாடினோம். அதன் கள அலுவலர் திரு. ஞானகுரு அவர்கள் நேரில் எங்களை அழைத்து சென்று உடனே முதியவருக்கு மதுரை மாவட்ட நீதி மன்றம் எதிரில் உள்ள ஆதார் கேந்திரிய அலுவலகத்திற்கு அழைத்து சென்று ஆதார் பதிவு செய்ய உதவினார்.
இன்னும் சில நாட்களில் ஐயா விற்கு ஆதார் கிடைத்து விடும்.
ஆதார் பதிவு சேவை மையத்தில் மேலாளர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த பணியை விரைந்து செய்து கொடுத்து, ஆதரவற்ற முதியவருக்கு உதவினர், அனைவருக்கும் நன்றி.
மேலும் முதியவருக்கு அடைக்கலம் ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் முன்னின்று பொறுப்பெடுத்து சான்றிதழ் வழங்கி ஐயாவிற்கு ஆதார் பெற்றுத்தர உதவியது.
குறிப்பு : ஆதார் இல்லாதவர்கள் மற்றும் அரசு அடையாள அட்டை இல்லாதவர்களும் அவர்களுக்கு குறிப்பிட்ட சில துறை அதிகாரி அல்லது முதியோர் இல்லம் நிர்வாக அறங்காவலரிடம் சான்றிதழ் பெற்று புதிய ஆதார் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.
நான் மறுபிறப்பு எடுத்த தருணம் போல் உணர்கிறேன் என்று எங்களை வாழ்த்தி பூரித்துக்கொண்டார் முதியவர்.
The moment an old man without an address got an address with Adaikkalam Old Age Support by Enrolling AADHAAR
Without a government-issued identity card, you will not be able to vote, you will not be able to open a bank account, and you will not be able to get government benefits.
Regarding this, a destitute old man living in Thiruparankundram area came to know about this. He has been planting and nurturing saplings in the area for many years.
In this situation, Mr. Valavanthan Destitute aged contacted 0ur Old Age Home and requested to obtain Aadhaar. After this we contacted Senior Citizen Helpline 14567 and sought help. Its field officer Mr. Gnanaguru took us personally to the Aadhaar Kendriya office opposite the Madurai District Court and helped him register Aadhaar. Aya will get aadhaar in few days.
Managers and staff at the Aadhaar Enrollment Service Center have expedited this task and helped the helpless old man, thanks to all.
Also, Our Adaikkalam Old Age Home for the elderly took responsibility and Managing Trustee certified Aiya to get Aadhaar.
Note : Those without Aadhaar and those without Government ID card can also apply for new Aadhaar registration by obtaining a certificate from their designated departmental officer or Old Age Home Managing trustee.

Leave a reply