மனிதனை நிகழ்காலத்தில் இருந்து கடத்திக்கொண்டு இறந்த காலத்திற்கு நடுவே அலைந்து திரிய வைத்துவிடுகிறது முதுமையில் வரும் நினைவிழப்பு நோய்.

Present is washed away and living with past memories leads human in their old age with Alzheimer. The heart follows the old memories were the foot paths printed along. Many stories has been experienced by Adaikkalam team, here is another rescue and reunion of a 85 year old veerayi. Its our pleasure to share the rescue incident with all of you.
இந்த சம்பவத்தில் மதுரை மாவட்டம் திருநகர் காவல்துறை, அடைக்கலம் முதியோர் இல்லம் பொறியாளர் ரவி, உதயகுமார், நாகலட்சுமி, விஸ்வா மற்றும் நிகழ்வின் கதாநாயகி எண்பத்து ஐந்து வயது மூதாட்டி வீராயி.
The success of the operation lies with Thirunagar Police Station and Adaikkalam Team Er. Ravi, Mr. Udayakumar ,Nagalakshmi, Vishwa, other volunteers and Mannar Thirumalai Naicker college students.
17.03.2025 திங்கள் இரவு பத்தரை மணிக்கு திருநகர் காவல்நிலையத்தில் இருந்து காவலர் சங்கர் அடைக்கலம் இலவச முதியோர் இல்லத்தின் நிர்வாகி விஸ்வாவிற்கு அலைபேசி வழியே தொடர்பு கொண்டு வயதான மூதாட்டி ஆதரவற்று தெருவில் இருக்கிறார் அவருக்கு தாற்காலிகமாக தங்கள் இல்லத்தில் தங்க வைக்க இயலுமா என்று கேட்டுக்கொண்டார். உடனே மறுப்பேதும் தெரிவிக்காமல் அழைத்து வரக்கூறப்பட்டது. காரணம் இரவில் மூதாட்டி வெளியில் சுற்றித்திருந்தால் பாதுகாப்பு இல்லை.
On a late night around 10.30 pm, Vishwa in charge of Adaikkalam free old age home received call from local police station as a old lady roaming on the streets and she needs help for a night. Immediately we accepted to bring the old lady to our Adaikkalam shelter.
அடுத்தநாள் காலை மூதாட்டியிடம் விசாரிக்கலாம் என்று முனைந்த போது அவர் எனது வீடு பக்கத்தில் இந்த கட்டிடத்திற்கு பின்னல் தான் உள்ளது என்றும் என்னை விட்டுவிட்டால் நானே சென்று விடுவேன் என்றும் கூறினார். பின் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி சமூகப்பணித்துறை மாணவிகளை ஒரு பயிற்சிக்காக பாட்டியை அழைத்து சென்று நன்கு குளிப்பாட்டி, புத்தாடை அணியச்செய்து, காலை உணவு கொடுத்து பாட்டி கொஞ்சம் நிதானித்தப்பின் கையில் பேப்பர் பேனா எடுத்து பாட்டியின் ;பெயர் மற்றும் இதர தகவல்களை சேகரித்து தருமாறு நிர்வாகத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டது. மாணவிகளின் முயற்சியால் பாட்டியின் பெயர், பிறந்த ஊர் மற்றும் வாக்கப்பட்டு சென்று ஊர், அவரின் மகன், மருமகள், மகள் பெயர்கள் கிடைத்தது. ஆனாலும் அவர் தற்போது வசித்துவந்த அவரின் மகன் வீடு எங்கு உள்ளது அல்லது அந்த ஊரின் பெயரினை மறந்துவிட்டார்.
Later the investigation has been successfully done by Er Ravi and with the support of Mr. Udayakumar and friends, the team reached the old lady family. The next day old grandma veerayi has been reunioned with her son and family in presence of Thirunagar Police Station Inspector Of Police Mr. Duraipandian.
பின்னர் தனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று தினமும் அழுதுகொண்டே இருந்த வேளையில், நமது பொறியாளர் ரவி அவர்களின் உதவியை நாடினோம். விசாரித்து சேகரிக்கப்பட்ட குறிப்புகளுடன் களம் இறங்கினார் ரவி. பாட்டி சொன்ன வாடிப்பட்டி மற்றும் ஐயங்கோட்டை ஊர்காரகளை அணுகினார். பின் பாட்டியின் நேரடி விசாரணைக்குப்பின் பொறியாளர் ரவி அவர்கள் திரு. உதயகுமார் அரவிந்த் கண் மருத்துவமனை உதவியுடன் வாடிப்படியில் உள்ள நண்பர் மூலம் பாட்டியின் புகைப்படம் மற்றும் தகவல்களை வாட்சப் குரூப்பில் பகிர்ந்து மார்ச் 20 இரவு பத்து மணியளவில் பாட்டி வீராயி அவர்களின் மகன் தர்மராஜ் அவர்களுக்கு இந்த செய்தி சென்று சேர்ந்தது. பாட்டியின் குடும்பத்தார்கள் பொறியாளர் ரவி அவர்களை தொடர்பு கொண்டு பாட்டியை குறித்து வாசாரித்து அவர் தான் என்று உறுதி படுத்தியபின். அடுத்தநாள் காலையில் குடும்பத்தார் அனைவரையும் நேரில் வரச்சொன்னோம். திருநகர் காவல் நிலையம் ஆய்வாளர் திரு. துரைபாண்டியன் அவர்கள் முன்னிலையில் மறதிநோயால் பாதிக்கப்பட்டு வீட்டை தொலைத்த மூதாட்டி வீராயி அவரது மகன் தர்மராஜ் மற்றும் குடும்பத்தாரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட மூதாட்டி தனது மகன் குடும்பத்துடன் மதுரை தெப்பக்குளம் அருகே வசித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தொலைந்து போன பாட்டியை நமது அடைக்கலம் இல்லத்தில் சேர்த்த காவல்துறை அதிகாரி மற்றும் காவலர்களுக்கு நன்றியும். பாதிக்கப்பட்ட மூதாட்டியின் குடும்பத்தை கண்டுபிடித்து மீண்டும் சேர்த்து வைக்க உதவிய பொறியாளர் ரவி மற்றும் அடைக்கலம் இலவச முதியோர் இல்லம் நிர்வாகத்தை திருநகர் காவல் ஆய்வாளர் துரைபாண்டியன் பாராட்டினார்.
We thank everyone who supported for this reunion.
Adaikkalam Free Old Age Home
9940832133 / 8608700088
Thirunagar, Madurai
உங்கள் முதியோர் இல்லத்திலும் அல்லது காப்பகத்தில் உறவுகளை இழந்த மனிதர்கள் இருப்பின் எங்களை தொடர்பு கொள்ளலாம். மீளிணைக்க நாங்கள் முயற்சிகள் மேற்கொள்வோம்.