BILINGUAL POST / இருமொழிப் பதிவு / ENGLISH / TAMIL/தமிழ் / ஆங்கிலம்
Urban wildlife Rehabilitation / நகர்ப்புற வனவிலங்கு புனர்வாழ்வு பயிற்சி
மாற்றமும் வளர்ச்சியும் தின்தோறும் கண்டு வரும் நகரின் அமைப்பு அங்கு வசிக்கும் வனவுயிரை எந்தளவு பாதிக்கிறது என்பது எங்களுக்கு வரும் விலங்கு மீட்பு அழைப்புகளே சாட்சியாகும்.
Day today Change and Development affects the Urban infrastructure is directly affects the Urban wildlife, which is addressed by our rescue call we handle on daily basis.
காயம்பட்ட விலங்குகள் ( வேட்டை, மாஞ்சா கயிற்றால் பட்டம், வாகன விபத்து, ஒளிப்புகும் கண்ணாடியில் மோதல்), தாயை அல்லது பெற்றோரை இழந்த குஞ்சுகள் அல்லது குட்டிகள், நோய் தாக்குதல், மனித நடவடிக்கைகளால் வாழிட ஆக்கிரமிப்பு
மற்றும் வாழிடம் சுருங்குதல் போன்றவைகள் இப்போது உள்ளதை விட இன்னும் பன்மடங்கு வரும் காலத்தில் நகர்ப்புற வனவிலங்குகள் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
Injured animals(Hunting, Manja thred kites, vehicle hit, transparent glasses in buildings), affected by contagious disease, Human interaction like Habitat destructions by buildings and Habitat loss will be more in mere future. Its time to build a team considering future to conserve the urban wildlife.
தமிழ்நாட்டில் அரிதாகவே வனவிலங்கு மறுவாழ்வு மையங்கள் உள்ளது. காரணம், மறுவாழ்வு மையங்கள் தேவை குறித்த விழிப்புணர்வு இன்மையே. பாதிக்கப்பட்ட விலங்குகளை அணுகும் வழிமுறைகள் அறியாததும் மிக முக்கிய காரணம்.
In Tamilnadu very limited urban wildlife rehabilitation center’s are established by government and non government institutions. This has to be addressed in all districts of tamilnadu and urban wildlife rescue centres to be initiated by government or non government agencies.
தமிழ் நாட்டில் உள்ள தனியார் மற்றும் விலங்குகள் சார்ந்த தொண்டு நிறுவனங்களை நகர்ப்புற வனவிலங்கு புனர்வாழ்வுக்கான பயிற்சி வகுப்பினை நடத்திட பெங்களூருவில் உள்ள பீப்பிள் பார் அனிமல் – மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையத்துடன் இணைந்து ஊர்வனம் இயற்கை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு குழு தமிழ்நாட்டில் ஆர்வமுள்ள தன்னார்வலர்களை அழைத்து மறுவாழ்வு வழங்கும் முறைகள் குறித்து பயிற்சிகள் வழங்கிட சனிக்கிழமை திட்டமிடப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
Considering this Volunteers as individual or NGO’s participated in one day rehabber training workshop at PFA Bangalore Wildlife Hospital and rehabilitation center which organized by Urvanam Nature and Wildlife Conservation Team on last Saturday 04.06.2022.
இந்நிகழ்ச்சியை பீப்பிள் பார் அனிமல் – மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையம் – பெங்களூரு ஹெனெரல் மேனேஜர் திரு. நவாஸ் அவர்கள் நகர்புறத்தில் வனவிலங்குகள் இருப்பின் அவசியம், அவர்கள் பல்லுயிர் பெருக்கத்தில் ஆற்றிடும் பணி, அவைகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சிறப்பாக விளக்கினார்.
This event headed by People For Animals Bengaluru General Manager Colonel Dr. Nawaz delivered a speech about Urban Wildlife, their threats, need for conservation and their organization activities.
விலங்குகளை எப்படி அணுகுவது, பராமரிப்பது, உணவளிப்பது என்று விரிவாக சிறப்புரையின் மூலம் விவரித்தார் திரு. கார்த்திக் PFA ன் வனவிலங்கு காப்பாளர் மற்றும் திரு. ராகுல் வனவிலங்கு பராமரிப்பாளர்.
Rehabilitaion session has been given by Curator of PFA Bengaluru Mr. Karthik, Zoologist and Rehabilitaion center tour and explanation by Reabilitator Mr. Rahul.
சென்னை, மதுரை, திருநெல்வேலி, கடலூர், நெய்வேலி, விருதுநகர், பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்து வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.
Individuals from NGO’s, Veterinary college students, Free lancers, attended this session from Tamilnadu’s Chennai, Madurai, Tirunelveli, Virudhunagar, Neyveli, Cuddalore Erode and from Karnata Banglore.
இந்நிகழ்ச்சியினை ஊர்வனம் குழுவின் ஒருங்கிணைப்பில் PFA – பெங்களூரு வைல்டு லைப் ஹாஸ்பிடல் மற்றும் ரீஹாபிலிடேசன் மையத்தில் பயிற்சி நடைபெற்றது.
This event was Organized by Urvanam NGO in Collaboration with People For Animals Bengaluru – Wild animal Hospital and Rehabilitation Centre.
இந்த நிகழ்வினை நடத்திட யோசனை வழங்கி நமக்கு ஊக்கமும் வழங்கிய விலங்கியலாளர் திரு. கார்த்திக் – அவர்களுக்கு மிக்க நன்றிக்கு.
Thanks to Mr. Karthik Curator PFA for coming with this idea and motivated our Urvanam team to organize such a great life saving activity in conserving Urban Wildlife.
தமிழ்நாட்டில் இருந்து இந்த நிகழ்வின் பயன் அறிந்து கர்நாடகாவில் பெங்களூரு மாநகரத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆர்வமுடன் பங்கேற்று நகர்ப்புற வனவிலங்கு பாதுகாப்பில் எதிர்வரும் காலத்தில் உதவிடவிருக்கும் அணைத்து பங்கேற்ப்பாளர்களுக்கும் நன்றி \
Also we Thank all the Participants who spent their time in long travel for this program to support Urban Wildlife Rehabilitation.
இந்த நிகழ்வினை நடத்திட அனுமதி மற்றும் வாய்ப்பினை தமிழகத்தின் தன்னார்வலர்களுக்கு வழங்கிய பீப்புள் பார் அனிமேல்ஸ் பெங்களூரு தொண்டு நிறுவனத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
We Thank People for Animals Bengaluru Wildlife Hospital and Rehabilitation Centre for accepting our request to train volunteers from Tamilnadu on Urban Wildlife Rehabilitation.
நீங்களும் இதுகுறித்து அறிந்து பயிற்சி பெற தொடர்பு கொள்ளுங்கள்.
Interested can contact to join in future activities
ஊர்வனம் இயற்கை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு குழு
Urvanam Nature and Wildlife Conservation Team
9940832133, 8608700088
1 Comment
M.Virumandi
Super sir🤝