சேமட்டான்குளம் கண்மாயில் என்ன செய்யப்போகிறோம்?

சேமட்டான்குளம் கண்மாயில் என்ன செய்யப்போகிறோம்?

இக்கண்மாயின் நீர் ஆதாரத்தை வைத்து தான் திருநகர் : சுந்தர்நகர், நெல்லையப்பபுரம்
எஸ்.ஆர்.வி. நகர், ஏ.ஆர்.வி. நகர் அமைதி சோலை, லையன்சிட்டி ஆகிய குடியிருப்பு பகுதிகள் உருவாகின. எஸ்.ஆர்.வி. நகர், அமைதி சோலை, லையன்சிட்டி குடியிருப்பு பகுதி உருவாவதற்கு முன் இங்கு விவசாயம் நடைபெற்றது.

கண்மாயின் முந்தைய நிலை:
இக்கண்மாயில் வருடந்தோறும் மழைக் காலங்களில் தண்ணீர் நிரம்பி இருக்கும்.
கண்மாயில் இறங்கி குளிக்க படித்துறை (தற்போது சுந்தர்நகர் விநாயகர் கோவில் அருகில்) அமையப்பெற்று இருந்தது.
குப்பைகள் இல்லா கண்மாய்.
இக்கண்மாயின் நீர்வழிப்பாதை அகலமாகவும், ஆக்கிரமிப்பு இன்றி, அடைப்பேதும் இல்லாது தண்ணீர் குண்டாற்று மடகுகளில் திறந்து விடப்பட்டால் நேரே எந்த தடையும் இன்றி கண்மாய்க்கு வந்து சேரும். இக்கண்மாயின் நீரை ஆதாரமாக கொண்டு விவசாயம் நடைபெற்றது.
நீர் பறவைகள் பல காணலாம்.
தற்போது இங்கு பசுமையின் சாட்சியாக ஒரு ஆலமரம் (2ல் ஒன்று வெட்டப்பட்டுவிட்டது)

தற்போதைய நிலைமை?
நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி, நீர் வரத்து குறைந்ததன்
விளைவு தண்ணீர் இல்லாமல் வரண்ட மைதானம் ஆகிப்போனது.
மழையால் கருவேலமரங்கள் துளிர்விட்டு காடுபோல வளர்ந்துகிடக்கிறது.
விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதியாக மாறியாது. குடியிறுப்பு பகுதியில் இருந்த சிறுக சிறுக குப்பைகளை இக்கண்மாயில் கொட்ட ஒரு குப்பை மேடே உருவாகி உள்ளது(குப்பைகள் சேகரிக்கும் வண்டி வந்தபோதும், பொது இடத்தில் குப்பைகள் கொட்டுவது நிறுத்தப்படவில்லை). வாகனங்களில் வந்து நெகிழிப்பைகளில் அடைத்து வைத்த குப்பைகளை கண்மாய்க்குள் வீசி எறிந்து விட்டு செல்பவர்களை நீங்கள் காணலாம்.
சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் அளவு குறைந்துள்ளது வருந்தமான ஒரு செய்தி.

இக்கண்மாயில் மலம் கழிப்பதும், வீடுகளில் அள்ளப்பட்ட மலம் (அ) கழிவுநீரை இரவு நேரங்களில் கொட்டிச்செல்வதும் தொடர்கிறது.

நமது திட்டம் என்ன?
இக்கண்மாயை மீட்டெடுப்பதில் நமது நீண்ட கால திட்டம் என்ன?

1. இப்பகுதி மக்களிடையே கண்மாயை காப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
2. அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக்கருவேலமரங்களை வேரோடு பிடிங்கி அழித்தல்.
3. தொடர் களப்பணியால் சீமைக்கருவேலமரங்கள் முலைக்காமல் தடுத்தல்.
4. குப்பைகள் நிறைந்து கிடக்கும் கண்மாயை தூய்மை படுத்தி. சுற்றுச்சூழல் மாசற்ற பகுதியாக மாற்றுதல்.
5. இக்கண்மாயில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
6. கண்மாய் கரையை சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு, நன்கு மரமாகும் வரையில் நீர் இட்டு, பாதுகாப்பு வேலிகள் அமைத்து பறவைகள் வந்து வசிக்க சிறிய வேடந்தாங்கள் சரணாலயமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்.
7. அந்த பகுதி மக்களை கொண்டே இம்முயற்ச்சியை தொடரவுள்ளோம், தொடங்கிவிட்டோம்…
8. திட்டத்தின் காலம் 1 ஆண்டு. பராமரிப்பு வருடந்தோறும் தொடரும்.

99% விழிப்புணர்வு 1%களப்(தூய்மைப்)பணி என்ற தாரக மந்திரம் நமது திட்டத்தை வெற்றியடைய செய்யும் என்று நம்புகிறோம்.

இந்த கண்மாயை மீட்டெடுப்பதின் வெற்றி அடுத்த அடுத்த கண்மாயை நோக்கி எங்களது பயணம் தொடரும்…

விருப்பம் உள்ளவர்களை நாங்கள் அழைக்கவில்லை. இது உங்கள் கடமை என்று எண்ணத்தில் ஏற்றுங்கள்.
நாட்டின் குடிமகனாக உங்கள் கடமையை ஆற்ற வாருங்கள்.

இரண்டு மணிரே உழைப்பு அடுத்து வரும் உங்கள் தலைமுறையை காக்கட்டும்… நல்ல நீர், நிலம், காற்று, பசுமையான உலகத்தை தந்துவிட்டு போவோம்.
ஞாயிறு தோறும் காலை : 7மணி முதல் 9மணி வரை
சேமட்டான்குளம் கண்மாய், மதுரை திருநகர் 3 வது நிறுத்தம், சுந்தர்நகர்.
9940832133

Leave a reply