
- This event has passed.
9ஆம் ஆண்டு திருநகர் பக்கம் கொண்டாடும் தீபஒளித் திருநாள்!
November 3, 2021 @ 5:00 pm - 7:00 pm
Rs70000
9ஆம் ஆண்டு திருநகர் பக்கம் கொண்டாடும் தீபஒளித் திருநாள்!
உங்கள் அனைவரையும் அழைக்கின்றோம்🙏
இந்த தீபஒளி 2021 திருநாளை திருநகர் பக்கம் குழுவினர் பழங்குடியினர் கிராமத்தில் கொண்டாட திட்டமிட்டுள்ளது.
இத்தனை ஆண்டுகாலம் இரவில் மின்சாரம் இன்றி இருளில் வாழ்ந்து வந்த மக்களின் விடிவு காலமாக இந்த தீபாவளியில் அவர்களுக்கு இந்த திட்டத்திற்கு நன்கொடை வழங்கிய பெரும் கொடையால் சூரிய மின்சக்தி இயக்க மின் சாதன விளக்குகள்(சோலார்) ஒவ்வொரு வீட்டிற்கும் கிடைக்கப்பெற்றது. மேலும் சிலருக்கு அரசின் கவனத்தில் ஏற்கப்பட்டு மின்சாரமும், பட்டாவும் கிடைக்கப்பெற்றது.
உண்மையில் இந்த வருடம் அவர்களுக்கு இது கொண்டாடி மகிழும் ஒரு நாள் தான்.
வருகின்ற 03.11.2021 (புதன்கிழமை) மாலை 5 மணியளவில் சோலார் மின் விளக்கு இயக்க தொடக்கவிழா, குழந்தைகளுக்கு புத்தாடை வழங்குதல், அனைத்து குடும்பங்களுக்கும் தீபாவளி பலகாரங்கள் மற்றும் இரவு விருந்து என அன்றைய மாலை அவர்களுடன், அவர்கள் பகுதியில், அவர்களின் மகிழ்ச்சியில் ஒரே குடும்பமாக நாமும் பங்கெடுப்போம்…
வாருங்கள்🙏
இடம்: காட்டு நாயக்கர் காலணி, ஜேஜே நகர், நிலையூர், திருப்பரங்குன்றம், மதுரை 05.
நாள் : 03.11.20221
நேரம் : மாலை 5 மணி
மேலும் விவரங்களுக்கு
9940832133, 8608700088