Mentally ill girl rescue at Madurai Thoppur / மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மதுரை தோப்பூர் அருகே மீட்பு

Mentally ill girl rescue at Madurai Thoppur / மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மதுரை தோப்பூர் அருகே மீட்பு

Tamil and English – Bilingual Post

மனநலம் பாதிக்கப்பட்ட முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மதுரை தோப்பூர் அருகே அரை நிர்வாண கோலத்தில் சாலையில் சுற்றித்திரிவதாக வாகன பயணி திரு.முருகன் நமக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலை அடுத்து நமது திருநகர் பக்கம் அடைக்கலம் குழு நேரில் சென்றுது. அப்போது அந்த பெண் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவரிடம் இருந்து சைக்கிளின் பின்னால் இருந்த பொருட்களை இழுத்து கீழே போட்டுக் கொண்டிருந்தார்.

Mentally ill lady (30) is in half nude near Thoppur Madurai, who was helpless. This information is shared to our Adaikkalam Thirunagar Pakkam Team by a local resident Mr. Murugan. Our rescue team immediately rushed to the spot to help the poor lady. The lady blocked aside cycle and started to damage the materials tied in the carrier.

மேல் ஆடையின்றி இருந்த அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நமது குழுவின் திருமதி.நாகலட்சமி மற்றும் திருமதி. பாண்டீஸ்வரி இருவரும் அணுகி அவரை குளிக்கச்செய்து, புத்தாடை உடுத்தி, உணவும் வழங்கிய பின் தன் நிலை குறித்து விசாரித்தனர்.

She was half nude and to cover her with cloth our women wing Mrs. Nagalakshmi and Mrs. Pandeeswari approached her. She was given bath, covered with new dress and given breakfast.
வாய் பேசாத அந்த பெண் எழுத்து மூலம் தனது பெயர் ஐஸ்வர்யா என்றும் தனது ஊர் நாகர்கோவில் கன்னியாகுமரி என்று கூறினார்.

She is dumb to express her need and our team tried to manage her.
இந்த சூழ்நிலையில் இந்த பெண்ணிற்கு பாதுகாப்பு ஏற்படுத்தி கொடுத்திட வேண்டும் என்ற முயற்சியில் தோப்பூர் ஆஸ்டின்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தின் திருவாதவூரில் அமைந்துள்ள நியூ கிரியேசன்ஸ் டிரஸ்ட் மனநல காப்பகத்தின் நிறுவனர் திருமதி.குலோரி தெபொரா அவர்களை தொடர்பு கொண்டு உதவி கேட்டோம். மறுப்பேதும் தெரிவிக்காமல் அழைத்து வரச்சொன்னார்கள்.

In the mean time we called Austinpatti police station and Tiruvathavur New Creations Trust, Metally Ill Care home for help.

காவல் துறையினர் விசாரித்து பின் மனநல காப்பகத்தில் சேர்க்க csr வழங்கி உதவி செய்தனர்.

நமது நிர்வாக குழுவை சேர்ந்த நாகலட்சுமி, பாண்டீஸ்வரி, ராகேஷ் கண்ணன், சீனிவாசன் மற்றும் விஷ்வா ஆகியோர் மீட்பு பணியை களத்திலும், அரசு அலுவலகங்களை தொடர்பு கொள்வதும், பாதுகாப்பாக காப்பகத்தில் கொண்டு சேர்க்கும் பணியை சிறப்பாக செய்தனர். அனைவருக்கும் நன்றி.

We thank Mrs. Glory Deborah New Creations Trust Founder and Austinpatti Police Station, Madurai.

நன்றி தமிழ்நாடு காவல்துறை மற்றும் நியூ கிரியேசன்ஸ் டிரஸ்ட்

– அடைக்கலம் முதியோர் இல்லம், திருநகர் பக்கம் குழு
மதுரை

Thanks to our Team

Mrs. Nagalakshmi, Mrs. Pandeeswar
Mr. Rajeshkannan, Mr. Srinivasan
Mr. Vishwanath

Support us to continue our service

Donate

WISH TO HELP CHARITABLE TRUST
A/C No: 335301010035153
Union Bank Of India
Branch: Tirupparankundram
IFSC CODE : UBIN0533530
MICR CODE : 625026005
BRANCH CODE: 533530

Leave a reply