<
[video width="640" height="352" mp4="http://wish2helptrust.org/wp-content/uploads/2021/10/WhatsApp-Video-2021-10-10-at-12.24.08.mp4"][/video]
பந்தல் அமைப்பாளர் திருப்பரங்குன்றம் - நிளையூர் கிராமம் ஓம்சக்தி நகரை சேர்ந்த திரு. கோவிந்தராஜ் அவர்கள் பணியின் போது கட்டிடத்தின் மேலே இருந்து தவறுதலாக கீழே விழுந்ததில், விபத்தில் அவரின் முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம்பட்டு நடக்க இயலாமல் போனது. இவர் மனைவி கட்டிட கூலித்தொழிலாளி ஆவார். இவர் தான் தன் கணவரை கவனித்து வருகிறார்.
இவரின் மனைவி வேலைக்கு சென்ற பின் இவருக்கு உதவிட யாரும் இல்லாத சூழலை திரு. சரவணன் அப்பகுதியை சேர்ந்தவர் மூலம் நமக்கு உதவி தேவை என்ற கோரிக்கை திருநகர் பக்கம் குழுவிற்கு வந்தது.
இதனை அடுத்து இவர் சுயமாக நகர்ந்து செல்ல மாற்றுத் திறனாளி மூன்று சக்கர சைக்கிள் ஒன்றை வழங்கிட நிதி திரட்டும் பணியினை தொடங்கினோம்.
இதனை அறிந்த மாமதுரை நண்பர்கள் குழுவினர் இதற்கு நிதியுதவி செய்திட முன்வந்தனர்.
பின் ஞாயிறு அன்று பயனாளிக்கு மூன்று சக்கர மாற்றுத்திறனாளி சைக்கிள் வழங்கப்பட்டது.
மாமதுரை நண்பர்கள் குழு மற்றும் ஓம்சக்தி நகர் சரவணன் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.