Black wood spider (செங்கால் மரச் சிலந்தி) காட்டுவழி பயணத்தில்

Black wood spider (செங்கால் மரச் சிலந்தி)
Nephila kuhli
காட்டுவழி பயணத்தில் வழி மறித்து பின்னப்பட்ட வலைக்கு நடுவே மிகப்பெரும் சிலந்தி ஒன்று, சாதாரணமாக நாங்கள் பார்க்கும் ஜெயன்ட் வுட் ஸ்பைடர் (Giant Wood Spider – Nephila pilipes ) போல் ஒத்த உடல் அளவில் காணப்பட்டாலும் கால்களின் நிறத்தில் சற்று வேறுபாடு இருந்தது. புகைப்படம் எடுத்துக்கொண்ட பின் வலையை சேதப்படுத்தாமல் விலகி நடை பயணத்தை தொடர்ந்தோம்.
வீடு திரும்பியதும் இந்த சிலந்தியின் பெயர் அறிந்துகொள்ள சிலந்தி வல்லுநர்கள் மற்றும் ஆய்வுக் குறிப்பு உதவியுடன் இச்சிலந்தி இனத்தை பற்றி அறிந்து கொண்டது உங்களுக்காக.

பெரிய சிலந்தி மற்றும் சிவப்பு நிற கால்கள் பார்க்க பயத்தை ஏற்படுத்தினாலும், மனிதர்களை கண்டால் விலகும் இயல்பு கொண்டதை கண்டது நேரடி அனுபவம்.
மனிதன் அச்சுறுத்தும் சமயம் தாக்கினும் ஆபதில்லா சிலந்தி, கடி சிறு வலியை கொடுக்குமாம்.
இவ்வினத்தில் பெண் சிலந்திகள் மிகப்பெரும் உருவமும், ஆண் சிலந்திகள் மிகச்சிறிய உருவமும் கொண்டவை. கருவுற்ற பெண் சிலந்தி முட்டையிட தரைக்கு வருமாம். தரையில் பொந்துகளில் அல்லது இலைச் சருகுகளில் முட்டைகளை இட்டு பாதுகாப்பாக மூடிவிடுமாம். இவ்வகை சிலந்திகளின் ஆயுட்காலம் ஒரு ஆண்டு என்று ஒரு ஆய்வுக் குறிப்பு சொல்கிறது.
மேலும் தெரிந்து கொள்ள என் காட்டு வழிப்பயணம் தொடரும், இணைந்து இருங்கள்.
#spider #SpiderIndia #சிலந்தி #Spidersofmadurai #Spidersoftamilnadu #arachnid
#Nephila_kuhli #nephila #woodspider #orbweaver #maduraiwild #wildlife
Vishwa Wishtohelp

Leave a reply