திருநகர் பக்கம் 9 ஆம் ஆண்டு தீபாவளி கொண்டாட்டம்

Celebration of 2021 diwali at Nomadic Tribal village

Thirunagar pakkam organised its 9th Annual diwali celebration at JJ nagar, Kattunayakar colony near Nilaiyur thirupparamkundram.

 

The event was started by inauguration of 28 solar lighting system at this village with each electricity power connection less Huts and houses.


It budgeted around 2.10lacks for 28 houses and all were collected through donation from well-wishers of the society. Which purchased and installed from SELCO India an leading solar manufacturing and distribution. Mrs. Mumtaj – Animal activists who lighted up the solar with switching on from a hut with the presence of all chief guests and village people.

Following this Children received their new dresses for diwali celebration arranged by thirunagar pakkam and distributed by chief guests Mr. Nambirajan – Manager SELCO india, Mr.Udayakumar-Aravind Eye Hospital,Mr. Gnana guru -Elder helpline field officer, Mr. Valikatti Manikandan, Mr. Senthil – APJ abdulkalam trust, Mr. Makkalthondan Ashok kumar, Mr. Emmalmudiyum Kannan, Mr. Periyadurai Social activists, Mrs. Mumtaj Animal activists.
Mr. Murugan – Head of the Community at JJ nagar given warm welcome to all chief guests with shawl.

For all the 300 resident of the community Thriunagar pakkam team served Diwali Special Dinner and celebrated their 9th year Diwali celebration.

This is their first diwali of Happiness with True Lights at each houses of Kattunayakar village.

We thank all the participants and village people for their patients till the end if the Diwali celebration.

திருநகர் பக்கம் குழுவின் தீபஒளி திருநாள் கொண்டாட்டம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் நிலையூர் அருகே உள்ள ஜேஜே நகர் பகுதியில் இந்த 2021 ஆம் ஆண்டில் தனது 9ஆம் ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தை நாடோடிப் பழங்குடி சமூக மக்கள் வாழும் கிராமத்தில் கொண்டாடி மகிழ்ந்தோம்.

இந்த நாளில் கொண்டாட்டங்களின் நிகழ்வாக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மின்சாரம் இன்றி தவித்த மக்களுக்கு தங்கள் வீடுகளில் மின்சாரம் கிடைக்க சோலார் மின்விளக்கு பொருத்தும் திட்டத்தை கையில் எடுத்தோம். அதன் தொடர்ச்சியாக அங்கே உள்ள 28 வீடுகளுக்கு, வீட்டிற்கு தலா ₹6000/. மதிப்பிலான சோலார் விளக்கும், மொபைல் சார்ஜரும் கொண்ட சாதனம் பொருத்தப்பட்டு, நேற்றைய நிகழ்வில் அதன் இயக்கத்தை சமூக ஆர்வலர் திருமதி. மும்தாஜ் மற்றும் மற்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சோலார் சாதன ஸ்விட்சை ஆன் செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக திரு. நம்பிராசன் – மேலாளர் செல்கோ இந்தியா, திரு. உதயா பாலகிருஷ்ணன் – அரவிந்த் கண் மருத்துவமனை, திரு.ஞானகுரு – கள அலுவலர் முதியோர் அவசர உதவி , திரு. வழிகாட்டி மணிகண்டன், திரு. செந்தில் APJ அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அறக்கட்டளை, திரு. மக்கள் தொண்டன் அசோக் குமார், திரு. எம்மால் முடியும் கண்ணன், திரு. பெரியதுரை, திருமதி மும்தாஜ் அவர்கள்.

பின் சிறப்பு விருந்தினர்கள் கைகளால் அனைத்து 80 குழந்தைகளுக்கும் புத்தாடை வழங்கி,பின் 50 குடும்பங்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் திரு. முருகன் தலைவர் காட்டு நாயக்கர் பழங்குடி, ஜேஜே நகர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.


இறுதியாக அனைத்து கிராம மக்களுக்கும் சுமார் 300 நபர்களுக்கு இரவு விருந்து அனைவருக்கும் பரிமாறி தீபாவளி நிகழ்வு கொண்டாட்டப்பட்டது.

இந்த தீபாவளி பண்டிகை அவர்களுக்கு சிறப்பான ஆண்டு, காரணம் இருளில் இருந்த ஒரு கிராமம், (ஒளி) வெளிச்சம் பெற்றது …

ஆதரவாளர்களுக்கும், நண்கொடையாளர்களுக்கும் திருநகர் பக்கம் சார்பாக மிக்க நன்றி…

Leave a reply