Birding at Semattankulam Tank 18.09.2022 / சேமட்டான்குளம் கண்மாய் பகுதியில் பறவைகள் காணல்

Birding at Semattankulam Tank 18.09.2022 / சேமட்டான்குளம் கண்மாய் பகுதியில் பறவைகள் காணல்

 

 

 

 

 

 

சேமட்டான்குளம் கண்மாய் சுற்றுப் பகுதியில் ஞாயிறு 18.09.2022 அன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஊர்வனம் குழு தன்னார்வளர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.

சேமட்டான்குளம் கண்மாயானது நகரமயமாக்கலின் தாக்கத்தால் பெருகிவரும் குடியிருப்பும் தவறவிட்ட குப்பை மேலாண்மையும், இணைக்கப்பட்ட மழைநீர் வடிகால்கள் யாவும் குடியிருப்பு கழிவுநீர் கலந்து கண்மாய் மிகவும் பாழ்பட்டு போனது. இந்த சூழலிலும் இந்த கண்மாயை சுற்றிலும் பல பறவை இனங்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குகிறது திருநகர் சேமட்டான்குளம் கண்மாய்.
இன்றைய நடையில் பறவைகள், தட்டான்கள், வண்டுகள்,மீன்கள், தாவரங்கள் போன்றவையும் கண்டு பதிவு செய்யப்பட்டது.

1. செந்தார்ப் பைங்கிளி Rose-ringed parakeet (Psittacula krameri) : 20
2. வெண்தொண்டை மீன்கொத்தி White Throated Kingfisher (Halcyon smyrnensis) :2
3. இராக்கொக்கு Black-crowned Night Heron (Nycticorax nycticorax) 2
4. ஆசியக் குயில் Asian Koel (Eudynamys scolopacea) 5
5. நாகணவாய் சாதாரண மைனா Common myna (Acridotheres tristis) 6
6.செங்குதக் கொண்டைக்குருவி red-vented bulbul (Pycnonotus cafer) 6
7.நாமக்கோழி Eurasian coot (Fulica atra) 5
8. வெண்மார்பு நீர்கோழி white-breasted waterhen (Amaurornis phoenicurus) 6 மற்றும் 2 குஞ்சுகள்
9. இந்தய நீர்க்காகம் Indian cormorant (Phalacrocorax fuscicollis)
10.மடையான் Indian pond heron (Ardeola grayii) 8
11. கொக்கு Egret 1
12.பச்சைப் பஞ்சுருட்டான் Asian green bee-eater (Merops orientalis) 3
13. காகம் House crow (Corvus splendens) 4
14. இரட்டை வால் குருவி black drongo (Dicrurus macrocercus)
15. மணிப்புறா Spotted dove (Spilopelia chinensis) 2
16.நீலவால் பஞ்சுருட்டான் Blue-tailed bee-eater (Merops philippinus) 2
17. ஊதாத் தேன்சிட்டு Purple sunbird (Cinnyris asiaticus)
18. சிறு முக்குளிப்பான் Little grebe (Tachybaptus ruficollis)
19.ஊதாப்பிட்டத் தேன்சிட்டு Purple-rumped sunbird (Leptocoma zeylonica) 6
20.பாம்புத்தாரா Oriental darter (Anhinga melanogaster) 1
21. நீளவால் தாழைக்கோழி Pheasant-tailed jacana (Hydrophasianus chirurgus)
22. நீலத்தாழை கோழி Purple swamphen (Porphyrio porphyrio) 5
23. மாடப்புறா Rock pigeon 6
24. சிலம்பன் Yellow-billed babbler (Argya affinis) 1
25.தையல் சிட்டு Common tailorbird (Orthotomus sutorius) 2
26.சிறிய சீழ்க்கைச்சிரவி Lesser whistling duck (Dendrocygna javanica)2
27. தாழைக் கோழி Common moorhen (Gallinula chloropus)11
28. கருப்புக் கோட்டான் Glossy ibis (Plegadis falcinellus) 1
29. பனை உழவாரன்
Asian palm swift (Cypsiurus balasiensis) 3
30. கருஞ்சிட்டு Indian robin (Copsychus fulicatus 1
31. கள்ளிப்புறா Laughing dove (Spilopelia senegalensis) 2
32. கூளக்கிடா
Spot-billed pelican (Pelecanus philippensis)
33. அண்டங்காக்கை
Large-billed crow (Corvus macrorhynchos) 2
34. பொன் முதுகு மரங்கொத்தி
Woodpecker 1.

மேலே கண்ட 34 பறவைகளை போல் சில ஆண்டுகளுக்கு முன் எடுத்த கணக்கெடுப்பில் கிடைத்த எண்ணிக்கை 52. பல இனங்கள் இம்முறை காணவில்லை. மேலும் கண்மாய் முழுவதும் வெங்காயதாமரை மூடியுள்ளதால் சில வாத்து இனங்கள் காண இலயவில்லை.
சூழல் பாதுகாப்பின் முக்கிய அம்சம் நம்மை சுற்றியுள்ள இயற்கை வளங்கள் குறித்த பொது அறிவு வளர்த்தல்.

ஊர்வனம் இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குழு.
திருநகர் பக்கம்
நீர்வனம்
www.wish2helptrust.org

#Bird_watching #birding #waterbody #water_ecosystem #நீர் #பறவை #பல்லுயிர் #biodiversity #ecosystem #Semattankulam #சேமட்டான்குளம் #கண்மாய் #குளம் #குட்டை #ஆறு #நிலையூர்_கால்வாய் #Thirunagar #திருநகர் #urvanam #ஊர்வனம்

Leave a reply