அடைக்கலம் முதியோர் இல்லம் 2ம் ஆண்டு விழா மற்றும் முதியோர் நிரந்தர வாழ்விடத்திட்டம் தொடக்க விழா

அடைக்கலம் முதியோர் இல்லம் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் முதியோர் நிரந்தர வாழ்விடத்திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி நமது திருநகர் அடைக்கலம் முதியோர் இல்லத்தில் திட்டமிட்டபடி ஞாயிறு மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியவர் நிர்வாக உறுப்பினர் திரு. தங்கப்பாண்டியன் அவர்கள்

நிகழ்ச்சியில் வரவேற்புரை நிர்வாக உறுப்பினர் வழங்கியவர் திரு. ராஜேஷ் கண்ணன் அவர்கள்

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள்

முனைவர் திரு. A . மணிவண்ணன் அவர்கள்
கூடுதல் காவல் கண்காணிப்பாளர், விருதுநகர் மாவட்டம்

முனைவர் திரு. S. நாகரத்தினம் அவர்கள்
தொடர்பியல்துறை தலைவர் மற்றும் பேராசிரியர் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

திருமதி. P. பூர்ணிமா வெங்கடேஷ் அவர்கள்
தாளாளர் சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி

திருமதி பிரேமலதா அவர்கள்
நிர்வாக அலுவலர் ஒன்ஸ் ஸ்டாப் சென்டர்

திருமதி. K. இந்திராகாந்தி அவர்கள்
95 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மதுரை மாநகராட்சி

திருமதி. சுவேதா சத்யன் அவர்கள்
94 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மதுரை மாநகராட்சி

திரு. S. சிலம்பரசன் அவர்கள்
உதவிப்பேராசிரியர் சமூகப்பணித்துறை மன்னர் கல்லூரி

திரு உதயகுமார் அவர்கள்
மேலாளர், அரவிந்த கண் மருத்துவமனை, மதுரை

அனைவரும் கலந்துகொண்டு தங்களின் சிறப்புரையால் அங்கத்தையும் நிகழ்வினையும் சிறப்பித்தனர்

நமது இல்லத்தின் மூத்த குடிமக்கள், மதுரையை சேர்ந்த பல சமூக ஆர்வலர்கள், பொது நலன் கொண்ட பொது மக்கள், தன்னார்வலர்கள் என பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

அடைக்கலம் முதியோர் இல்லம் ஆண்டறிக்கை அறக்கட்டளையின் நிறுவனர் திரு.பு இரா விசுவநாத் அவர்கள் வாசித்தார்

அடைக்கலம் முதியோர் இல்லம் ஆண்டறிக்கை

நோக்கம்: கொரோனா தொற்று முதல் அலையின் போது ஆதரவற்றோருக்கு தேவையான உணவு பொட்டலங்கள் இலவசமாக விநியோகித்த வேளையில் எவ்வித ஆதரவின்றி நிர்கதியாய் காணப்பட்ட முதியோர்களை காண நேரிட்டது.அந்த நேரம் மனதில் உதித்த எண்ணம் தான் ஆதரவற்றோருக்கான முதியோர் இல்லம் தொடங்க  வேண்டும் என்பது.

 

தோற்றம்: இதன் அடிப்படையில் திருநகர் பக்கம் குழுவை சேர்ந்த களப்பணியாளர்களுடன் ஆலோசித்து ஆதரவற்ற பெரியவர்களுக்கு எவ்வித சேவை கட்டணமும் இன்றி 100 % இலவசமாக முதியோருக்கு  சேவை செய்திட “அடைக்கலம் முதியோர் இல்லம்” என்ற பெயரில் நமது இல்லம் ஜூலை 2020 ல், திருநகர் 5 வது நிறுத்தம் ஆசிரியர் தெருவில் வாடகை கட்டிடத்தில் தொடங்கப்பட்டது.

 

சேர்க்கை வழிமுறைகள்: நமது இல்லத்தில் சேர்க்கைக்கான விதிமுறைகள் கீழ்கண்டவாறு வகுக்கப்பட்டது.

  1. கட்டணம் செலுத்த இயலாத கைவிடப்பட்ட ஏழை முதியோராக இருத்தல் வேண்டும்
  2. திருமணம் ஆகாத அல்லது வாரிசுகளற்ற முதியோராக இருத்தல் வேண்டும்
  3. மனைவியை இழந்தோர் / கணவனை இழந்தோருக்கு முன்னுரிமை
  4. முதியோர் தங்கள் பெண் பிள்ளையை திருமணம் செய்து கொடுத்துவிட்டு தங்களுக்கு நிரந்தர வாழ்விடம், உணவின்றி தவித்தோருக்கு அடைக்கலம்.

நிதி ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மை :

முதியோர் இல்லம் தொடங்குவதற்கான நிதியானது சேவை மனப்பான்மை கொண்ட நல்ல உள்ளங்களின் மூலம்  நமது அறக்கட்டளைக்கு பெரும்பகுதி நன்கொடையாக பெறப்பட்டது. அதன் அடிப்படையில் கட்டிடத்திற்கு தேவையான முன் பணம், மாத வாடகை, கட்டில் படுக்கை, உணவுப் பொருட்கள், சமையலறை  சாதனங்கள், அலுவலக ஃபர்னிச்சர்கள், மருத்துவ சாதனங்கள், பொழுது போக்கு சாதனங்கள் போன்றவை நிதியாகவும் பொருட்களாகவும் பெறப்பட்டது(இதில் புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் அடங்கும்).

அன்றாட உணவுத்தேவையானது அறக்கட்டளை நிதியின் மூலமாகவும், தவிர  பிறந்தநாள், நினைவுநாள், இல்ல விசேஷங்கள், பண்டிகைகள்  போன்ற நாட்களில் பொதுமக்கள் அளிக்கும் உணவு தானத்தின் மூலமும்  நிறைவேற்றப்படுகிறது.

காலை உணவு ரூ 2000/.
மதிய உணவு ரூ 2500/.
இரவு உணவு ரூ 2000/.

 

நமது மாத செலவுகள் ரூ 160,000

வாடகை  ரூ 25000
பணியாளர்கள் ஊதியம் ரூ 50,000
உணவு தயாரிப்பு ரூ 30000
மின் கட்டணம் ரூ 15000
மருத்துவம் ரூ 10000
நர்சிங் சேவை ரூ 5000
சுகாதார கட்டணம் ரூ 5000
ஆம்புலன்ஸ் மற்றும் வாகன பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவு ரூ 10000/.
இதர செலவுகள்  ரூ 5000/. 

படுக்கை வசதி :

முதலில் ஆரம்பிக்கப்பட்ட வாடகை கட்டிடத்தில் 13 படுக்கை வசதியும், இரண்டாவதாக இடமாற்றம் செய்யப்பட்ட கட்டிடத்தில் 16 படுக்கை வசதியும் ஏற்படுத்த்தப்பட்டது. நாளடைவில் போது மக்களிடத்தில் நமது இல்லம் இலவச முதியோர் சேவையில் சிறப்பாக செயல்பட்டதால் ஆதரவற்றோர் சேர்க்கை பெருகத்தொடங்கியது. இதனையடுத்து கூடுதலாக 30 படுக்கை வசதி, நடைப்பயிற்சி, கழிப்பறை வசதி, சுத்தமான சுற்றுச்சூழல், தோட்டம் போன்றவற்றிற்காக மூன்றாவது முறையாக பெரிய அளவில் மாடியுடன் கூடிய  வாடகை கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.

மருத்துவ வசதி :                                               

வாரம் தோறும் சனிக்கிழமை மருத்துவரின் நேரடி வருகையும், மாதம் ஒருமுறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அவசர உதவிக்கு நகர்ப்புற அல்லது மாவட்ட அரசு ராசாசி மருத்துவமனை மருத்துவர்கள் உதவியுடன் பரிசோதனையும் சிகிச்சையும் வழங்கப்படுகிறது. தொடர்ச்சியாக மருத்துவ முகாம், கண் பரிசோதனை, மனநல ஆலோசனை முகாம்கள் மூலம் முதியோர்களின் ஆரோக்கியம் பேணப்படுகின்றது.

 

அரசு அங்கீகாரம் பெறுவதற்காக மாவட்ட சமூகநலத்துறை வழிகாட்டுதலின்படி தேவையான ஆவணங்கள் காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கட்டிட தர சான்றிதழ் துறை போன்ற துறைகளின் மூலமாக தடையில்லா சான்று ஆவணங்கள் பெறப்பட்டு சமூகநலத்துறையில்  சமர்ப்பிக்கப்பட்டது. அவர்களின் நேரடி கள ஆய்வுக்குப்பின் முதியோர் இல்லம் நடத்துவதற்கான பதிவு சான்றிதழ் பெறப்பட்டது.

 அரசுத்துறைகளுடன் இணைந்தாற்றிய சேவைகள் :

சமூகநலத்துறை, மூத்தகுடிமக்கள், காவல்துறை, இதர அரசுத்துறையினருடன்  இணைந்து அவர்களின் வேண்டுகோள்  மற்றும் வழிகாட்டுதலின்படி சாலையோரத்தில் ஆதரவின்றி தவிக்கும், நோயால் பாதிக்கப்பட்ட முதியோர்களை மீட்டு நமது காப்பகம் மற்றும் இதர காப்பகத்தில் சேர்த்திட தன்னார்வலர்கள் மற்றும் அவசர ஊர்தி சேவை வழங்கப்பட்டது.

 

 

 

மேலும் இறுதி காலத்தில் இயற்கை எய்திய பெரியோர்களின் இறுதி சடங்கை எவ்வித கட்டணமுமின்றி அணைத்து சடங்குகளையும் மனமுவந்து செய்தல்.

 

 

 

குடும்பத்தை தொலைத்தோரை மீண்டும் சேர்ப்பித்தல் :

வழி தெரியாது, மொழி தெரியாது பிற மாநிலங்களில்  இருந்து உறவினர்களால் கைவிடப்பட்ட பெரியோர்களை மீட்டு மீண்டும் அவர்தம் இல்லத்தில் உறவுகளிடத்தில் ஒப்படைத்தல். முதுமை ஞயாபகமறதி காரணமாக வழிதவறியவர்களை மீட்டு குடும்பத்துடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட தெருவோரம் வீசப்பட்ட பெரியோர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளித்து ஆதரவளிக்கப்பட்டது.

தவிர நாம் செய்து வரும் சிறப்பான சேவையை மென்மேலும் பெரியளவில் செய்திட பொதுமக்களிடத்தில் இருந்து வரும் கோரிக்கைகளை ஏற்று நிரந்தரமாக சொந்தமாக ஒரு முதியோர் இல்லம் நிலம் வாங்கி அணைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய  கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைவரின் ஆதரவையும் நன்கொடைகளையும் எதிர்பார்க்கின்றோம். நன்றி ///

இவண்
அடைக்கலம் முதியோர் இல்லம்
நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் – விஷ் டூ ஹெல்ப் அறக்கட்டளை

ஆதரவற்ற முதியோர்களின் நிரந்தர வாழ்விடத்திட்டம் நிர்வாக உறுப்பினர் திருமதி. நாகலட்சுமி அவர்கள் வாசித்தார்

அடைக்கலம் (இலவச) முதியோர் இல்லம்

நிரந்தர வாழ்விடத்திட்டம் 2022

Run by –
விஷ் டூ ஹெல்ப் அறக்கட்டளை – பதிவு எண் – 1/2016

சமூகநலத்துறை  அங்கீகார – பதிவு எண் 3/2021

முதியோர் இல்லம் முகவரி : #69 ஜி எஸ் டி சாலை, 3வது நிறுத்தம் மதுரை
அறக்கட்டளை பதிவுசெய்யப்பட்ட முகவரி சி எஸ் ஆர் நகர், 5வது நிறுத்தம் மதுரை
Contact : 9940832133, 8608700088, 0452-2915582

Email : [email protected], [email protected]

Website : www.wish2helptrust.org

Youtube Channel Link https://www.youtube.com/channel/UCxV1vQH8rMlmq0fyqUyTY1Q

திட்டத்தலைப்பு

ஆதரவற்ற முதியோர் இலவச நிரந்தர வாழ்விடத் திட்டம்  2022

நன்கொடை அளிப்பவர்கள் வருமானவரி சட்டம்  80Gன் கீழ் வரிச்சலுகை  பெற்றுக்கொள்ளலாம்

        (Registered u/s 12AA of Income Tax Act, 1961, Registration No. CIT(EXEMPTION),CHENNAI/12AA/2018-19/A/10130)

(Approved u/s 80G(5)(vi) of Income Tax Act, 1961, Approval No. CIT(EXEMPTION),CHENNAI/80G/2020-21/A/10139)

PAN: AAATW4225D

 

முதியோர் இல்லம் ஒரு குறிப்பு:

திருநகர் பக்கம், ஊர்வனம் மற்றும் நீர்வனம் குழுவின் தொடர் எட்டு ஆண்டுகள் சேவையில் கொரோனா தொற்று முதல் அலையின் போது ஆதரவற்றோருக்கு தேவையான உணவு பொட்டலங்கள் இலவசமாக விநியோகித்த வேளையில் எவ்வித ஆதரவின்றி நிர்கதியாய் காணப்பட்ட முதியோர்களை காண நேரிட்டது.அந்த நேரம் மனதில் உதித்த எண்ணம் தான் ஆதரவற்றோருக்கான முதியோர் இல்லம் தொடங்க  வேண்டும் என்பது.

இதன் அடிப்படையில் திருநகர் பக்கம் குழுவை சேர்ந்த  களப்பணியாளர்களுடன் ஆலோசித்து ஆதரவற்ற பெரியவர்களுக்கு எவ்வித சேவை கட்டணமும் இன்றி 100 % இலவசமாக முதியோருக்கு  சேவை செய்திட “அடைக்கலம் முதியோர் இல்லம்” என்ற பெயரில் நமது இல்லம் ஜூலை 2020 ல், திருநகர் 5 வது நிறுத்தம் ஆசிரியர் தெருவில் வாடகை கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. 

சேர்க்கை வழிமுறைகள்: நமது இல்லத்தில் சேர்க்கைக்கான விதிமுறைகள் கீழ்கண்டவாறு வகுக்கப்பட்டது.

  1. கட்டணம் செலுத்த இயலாத கைவிடப்பட்ட ஏழை முதியோராக இருத்தல் வேண்டும்
  2. திருமணம் ஆகாத அல்லது வாரிசுகளற்ற முதியோராக இருத்தல் வேண்டும்
  3. மனைவியை இழந்தோர் / கணவனை இழந்தோருக்கு முன்னுரிமை
  4. முதியோர் தங்கள் பெண் பிள்ளையை திருமணம் செய்து கொடுத்துவிட்டு தங்களுக்கு நிரந்தர வாழ்விடம், உணவின்றி தவிப்போருக்கு அடைக்கலம்.

நிதி ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மை :

முதியோர் இல்லம் தொடங்குவதற்கான நிதியானது சேவை மனப்பான்மை கொண்ட நல்ல உள்ளங்களின் மூலம்  நமது அறக்கட்டளைக்கு பெரும்பகுதி நன்கொடையாக பெறப்பட்டது. அதன் அடிப்படையில் கட்டிடத்திற்கு தேவையான முன் பணம், மாத வாடகை, கட்டில் படுக்கை, உணவுப் பொருட்கள், சமையலறை  சாதனங்கள், அலுவலக ஃபர்னிச்சர்கள், மருத்துவ சாதனங்கள், பொழுது போக்கு சாதனங்கள் போன்றவை நிதியாகவும் பொருட்களாகவும் பெறப்பட்டது(இதில் புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் அடங்கும்).

அன்றாட உணவுத்தேவையானது அறக்கட்டளை நிதியின் மூலமாகவும், தவிர  பிறந்தநாள், நினைவுநாள், இல்ல விசேஷங்கள், பண்டிகைகள்  போன்ற நாட்களில் பொதுமக்கள் அளிக்கும் உணவு தானத்தின் மூலமும்  நிறைவேற்றப்படுகிறது.

காலை உணவு ரூ 2000/.
மதிய உணவு ரூ 2500/.
இரவு உணவு ரூ 2000/.

நமது மாத செலவுகள் ரூ 155,000/.

வாடகை  ரூ 25000
பணியாளர்கள் ஊதியம் ரூ 50,000
உணவு தயாரிப்பு ரூ 30000
மின் கட்டணம் ரூ 15000
மருத்துவம் ரூ 10000
நர்சிங் சேவை ரூ 5000
சுகாதார கட்டணம் ரூ 5000
ஆம்புலன்ஸ் மற்றும் வாகன பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவு ரூ 10000/.
இதர செலவுகள்  ரூ 5000/.

 

படுக்கை வசதி :

முதலில் ஆரம்பிக்கப்பட்ட வாடகை கட்டிடத்தில் 13 படுக்கை வசதியும், இரண்டாவதாக இடமாற்றம் செய்யப்பட்ட கட்டிடத்தில் 16 படுக்கை வசதியும் ஏற்படுத்த்தப்பட்டது. நாளடைவில் பொது மக்களிடத்தில் நமது இல்லம் இலவச முதியோர் சேவையில் சிறப்பாக செயல்பட்டதால் ஆதரவற்றோர் சேர்க்கை பெருகத்தொடங்கியது.  இதனையடுத்து கூடுதலாக 30 படுக்கை வசதி, நடைப்பயிற்சி, கழிப்பறை வசதி, சுத்தமான சுற்றுச்சூழல், தோட்டம் போன்றவற்றிற்காக மூன்றாவது முறையாக பெரிய அளவில் மாடியுடன் கூடிய  வாடகை கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.

மருத்துவ வசதி :                                                                      

வாரம் தோறும் சனிக்கிழமை மருத்துவரின் நேரடி வருகையும், மாதம் ஒருமுறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அவசர உதவிக்கு நகர்ப்புற அல்லது மாவட்ட அரசு ராசாசி மருத்துவமனை மருத்துவர்கள் உதவியுடன் பரிசோதனையும் சிகிச்சையும் வழங்கப்படுகிறது.

தொடர்ச்சியாக மருத்துவ முகாம், கண் பரிசோதனை, மனநல ஆலோசனை முகாம்கள் மூலம் முதியோர்களின் ஆரோக்கியம் பேணப்படுகின்றது. 

அரசு அங்கீகாரம் பெற்ற முதியோர் இல்லம் </strong :                                                                                                               அரசு அங்கீகாரம் பெறுவதற்காக மாவட்ட சமூகநலத்துறை வழிகாட்டுதலின்படி தேவையான ஆவணங்கள் காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கட்டிட தர சான்றிதழ் துறை போன்ற துறைகளின் மூலமாக தடையில்லா சான்று ஆவணங்கள் பெறப்பட்டு சமூகநலத்துறையில்  சமர்ப்பிக்கப்பட்ட து . அவர்களின் நேரடி கள ஆய்வுக்குப்பின் முதியோர் இல்லம் நடத்துவதற்கான பதிவு சான்றிதழ் பெறப்பட்டது. 

அரசுத்துறைகளுடன் இணைந்தாற்றிய சேவைகள் :

சமூகநலத்துறை, மூத்தகுடிமக்கள், காவல்துறை, இதர அரசுத்துறையினருடன்  இணைந்து அவர்களின் வேண்டுகோள்  மற்றும் வழிகாட்டுதலின்படி சாலையோரத்தில் ஆதரவின்றி தவிக்கும், நோயால் பாதிக்கப்பட்ட முதியோர்களை மீட்டு நமது காப்பகம் மற்றும் இதர காப்பகத்தில் சேர்த்திட தன்னார்வலர்கள் மற்றும் அவசர ஊர்தி சேவை வழங்கப்பட்டது.

மேலும் இறுதி காலத்தில் இயற்கை எய்திய பெரியோர்களின் இறுதி சடங்கை எவ்வித கட்டணமுமின்றி அணைத்து சடங்குகளையும் மனமுவந்து செய்தல்.

குடும்பத்தை தொலைத்தோரை மீண்டும் சேர்ப்பித்தல் :

வழி தெரியாது, மொழி தெரியாது பிற மாநிலங்களில்  இருந்து உறவினர்களால் கைவிடப்பட்ட பெரியோர்களை மீட்டு மீண்டும் அவர்தம் இல்லத்தில் உறவுகளிடத்தில் ஒப்படைத்தல். முதுமை ஞயாபகமறதி காரணமாக வழிதவறியவர்களை மீட்டு குடும்பத்துடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட தெருவோரம் வீசப்பட்ட பெரியோர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளித்து ஆதரவளிக்கப்பட்டது.

தவிர நாம் செய்து வரும் சிறப்பான சேவையை மென்மேலும் பெரியளவில் செய்திட பொதுமக்களிடத்தில் இருந்து வரும் கோரிக்கைகளை ஏற்று நிரந்தரமாக சொந்தமாக ஒரு முதியோர் இல்லம் நிலம் வாங்கி அணைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய  கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைவரின் ஆதரவையும் நன்கொடைகளையும் எதிர்பார்க்கின்றோம்.

அடைக்கலம் முதியோர் இல்ல நிரந்தர வாழ்விடத்திட்டம்

ஆதரவற்ற முதியோர் சேவையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்புடன்  இயங்கிவரும் நமது அடைக்கலம் முதியோர் இல்லத்தின் எதிர்கால தேவையினை கருத்தில் கொண்டு பெருகிவரும் ஆதரவற்ற மற்றும் புறக்கணிக்கப்பட்ட பெரியோர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக அணைத்து வசதிகளுடன் கூடிய ஒரு நிரந்தர முதியோர் இல்ல கட்டிடத்தை உருவாக்கிட முடிவு செய்துள்ளோம். இந்த இல்லத்தில் முதியோர்களுக்கு தேவையான அணைத்து அடிப்படை வசதிகளான நவீன படுக்கைவசதிகள், சுற்றுச்சூழல், பூஜையறை, வரவேற்பறை, பார்வையாளர்கள் அறை, கவுன்சிலிங் அறை, நூலகம், தொலைகாட்சியறை, கலந்துரையாடல் கூட்டரங்கம், நடைப்பயிற்சி வளாகம், தோட்டம் மற்றும் நந்தவனம், யோகா  அறை, தியானக்கூடம்,சமையல்கூடங்கள், பொழுதுபோக்கு வசதிகள், கூடுதல் குளியலறை, கழிவறைகள்  உள்ளிட்ட நவீன கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிட திட்டமிட்டுள்ளோம்.

தேவையான இடம் : எங்களின் இந்த  திட்டத்திற்கான அடிப்படைத் தேவையான நிலமானது குறைந்தபட்சம் 25 செண்டுகள் வரை தேவைப்படுகிறது. இந்த நிலத்தின் தேவையானது பொதுமக்களின் நன்கொடை மூலமாகவோ அன்பளிப்பு மூலமாகவோ அல்லது நமது கட்டிட நிதியின் மூலமாகவோ வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இடம் அமைப்பு: இந்த நிலத்தில் அமையவுள்ள இல்லமானது  பொது மக்கள் எளிதல் அணுக கூடியதாகவும் மற்றும் அவசர மருத்துவ வசதி பெறவும் விரைவான  போக்குவரத்து வசதி, தொலைத்தொடர்பு வசதி  உள்ள இடமாகவும் இருத்தலாக வேண்டுமென  எதிர்பார்க்கப்படுகிறது.

உள்கட்டமைப்பு: இதில் 10 செண்ட் நிலம் தரைத்தளம் மற்றும் மேல்தளம் கொண்டதாகவும் அதில் ஆண் மற்றும் பெண்களுக்கு தனி அறைகளும் வழங்கப்படவுள்ளது. மொத்தம் 50 படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படும் முதியோர்களுக்கு சிறப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.

வெளிகட்டமைப்பு : வளாகத்தை சுற்றி வெளிப்புற சுற்றுச்சுவர், இயற்கை காற்றை சுவாசிக்க கட்டிடத்தின் வெளி சுற்றுப்பகுதியில் முதியோர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைபாதை வளாகம், நாளிதழ் வாசிப்பு மற்றும் புத்தக வாசிப்பு, யோகா மற்றும் தியானம் மேற்கொள்ள தனி இட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது, முதியோர்களை மற்றும் வேலையாட்களை கண்காணிக்க பாதுகாவலர் அறை, நமது இல்லத்தின் உணவு தேவையை பூர்த்தி செய்ய காய்கறி, பழங்கள், கீரைகள் மற்றும் மூலிகை தாவரங்கள் முதியோர்களால் பயிரிட மற்றும் பராமரிக்க இடவசதி, மாலை நேர இளைப்பாறலுக்கு நந்தவனம், கால்நடை வளர்ப்பு போன்ற எங்கள் முதியோர்களின் ஆசைகளையும்  ஆலோசனைகளையும் திட்டங்களாக வடிவமைத்துள்ளோம்.

நிதி மதிப்பீடு: நிலம், கட்டிட கட்டுமானப்பணிகள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பிற வசதிகள் ஏற்படுத்துவதற்கு திட்ட நிதியாக

ரூ. ஒரு கோடியே ஐம்பது லட்சம் (Rs.1,50,00,000/.)

நிதி திரட்டிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நிதி ஆதாரங்களை பொதுமக்களாகிய உங்களிடத்திலும், சமூக சேவையில் ஆர்வம் கொண்ட பெருவணிக நிறுவனங்களிடம் இருந்தும் நிதியாகவோ, பொருட்களாகவோ மிகப்பெரும் ஆதரவாக  எதிர்பார்க்கின்றோம்.

வங்கி கணக்கு விபரங்கள் (Bank Account Details):

Account Number         :           922010012322161
Account Holder Name :           WISH TO HELP CHARITABLE TRUST
Bank Name                 :           Axis Bank
IFS Code                      :           UTIB0003136
Branch                         :           Thirunagar, Madurai
Branch Code                :           3136

பெறப்பட்ட நிதியின் விவரங்கள் கீழே உள்ள லிங்கில் உள்ளது:

https://docs.google.com/spreadsheets/d/15zW_gBstu8sjrhT2nmlU_foa77F_J2iwqV-jOEFkNE4/edit?usp=sharing

இணைப்பு சான்றிதழ்கள்

80G Income tax certificate

12AA Income tax certificate

CSR Certificate

DSWO Certificate

விஷ் டூ ஹெல்ப் அறக்கட்டளையின் மற்ற சேவைகள்

 

E TV Bharath

நன்றியுரை வழங்கியவர் நிர்வாக உறுப்பினர் மற்றும் ஆடியிட்டார் திரு. பவுன்ராஜ் வழங்கினார்

 

 

Leave a reply