சேமட்டான்குளத்தில் 40 பறவை இனம் / 40 bird species recorded at Semattankulam tank

*40 bird species recorded at Semattankulam tank*

சேமட்டான்குளம் கண்மாயில் பறவைகள் காணல் மற்றும் கணக்கெடுப்பு 2022

நாள் 13.02.2022, ஞாயிற்றுக்கிழமை

காலை 7 மணி முதல் 9 . 30 மணி வரை
கலந்து கொண்டவர்கள்:
விஸ்வநாத், கோடீஸ்வரன், வித்தோஷ குமார், நவீன் பாரதி, விஷ்ணு, அருண், கீர்த்தி வாசன், வீரமணி, சிவசுப்பிரமணியன், அன்புக்கரசு, அனீஷ், அதிதீ, வனலிகா

பறவைகள் காணல் மற்றும் கணக்கெடுப்பு நிகழ்ச்சி இன்று ஊர்வனம் குழு சார்பில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள திருநகர் சேமட்டான்குளம் கண்மாய் பகுதியில் நடைபெற்றது.
இந்த நடையில் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 40 வகை பறவையினங்கள் நேரில் கண்டு பதிவு செய்யப்பட்டது.


1. வக்கா அல்லது இராக்கொக்கு (Black Crowned Night Heron)
2. கானாங் கோழி (White breasted water hen)
3. கவுதாரி (Grey francolin)
4. காகம் (House crow)
5. மடையான் (Indian pond heron)
6. பஞ்சுருட்டான் (Bee eater)
7. சின்னான் (Red vented bulbul)
8. கொண்டலாத்தி (Hoopoe)
9. வெள்ளை அரிவாள் மூக்கன் ( Black headed ibis)
10. நீர்காகம் (Cormorant)
11. நாகணவாய் (Myna)
12. செண்பகம் (Greater coucal)
13. ஊதா தேன் சிட்டு (Purple sun bird)
14. சாம்பல் நாரை (Grey heron)
15. நாமக்கோழி (Common coot)
16. தாழைக் கோழி (Moorhen)
17. பனை உழவாரன் (Palm swift)
18. தவிட்டுக் குருவி (Yellow billed babbler)
19. குயில் (Asian koel)
20. கரிச்சான் (Black drongo)
21. தையல் சிட்டு (Common Tailor bird)
22.மணிப்புறா (Spotted dove)
23. சிறிய அரிவாள்மூக்கன் (Glossy ibis)
24. பாம்புத்தாரா (Darter)
25. மாடப்புறா (Rock pigeon)
26. தவிட்டுப் புறா (Laughing dove)
27. முக்குளிப்பான் ( Little grebe)
28. பச்சைக்கிளி ( Rose ringed parakeet)
29. சாம்பல் கதிர்க்குருவி (Ashy prinia)
30. சுடலைக் குயில் (Jacobin cuckoo)
31. தாமரைக் கோழி (Pheasant tailed jacana)
32. நீலத் தாழைக் கோழி (Purple swamp hen)
33. வால் காக்கை (Rufous treepie)
34.  உண்ணிக் கொக்கு (Cattle egret)
35. கொக்கு
36. வெண்மார்பு மீன் கொத்தி (White throated kingfiser)
37. அண்டங் காக்கை (Large billed crow)
38. கருப்பு வெள்ளை மீன் கொத்தி (Pied kingfisher)
39. தகைவிலான் (Barn swallow)
40. ஊர்த் தேன் சிட்டு(Purple rumped sundbird).

நீர்நிலைகளை சார்ந்தும் சாராமலும் வாழும் பறவைகள் இதில் அடங்கும்.
களப்பணியில் இணைந்திட
9940832133, 8608700088

Leave a reply